சீகிரிய பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (03) வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அனுமதிச்சீட்டு வரிசையில் நீண்ட நேரம் நிற்பது, முதலுதவி நிலையங்கள் இல்லாமை, போதிய நீர் வசதியின்மை, குளவி கொட்டினால் பாதுகாப்பு போன்ற 15 விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், ஒவ்வொரு நாளும் 11,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்துள்ளதாகவும், அடுத்த வருடம் 30 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி ருவன் ரணசிங்க தெரிவித்தார்.

The post சிகிரியாவில் சுற்றுலாப் பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் appeared first on Daily Ceylon.



Source link