Last Updated:

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இருந்தபோதிலும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

News18

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படத்தின் அப்டேட் நாளை  வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இருந்தபோதிலும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.

இதையடுத்து வாடிவாசல் படம் கைவிடப்பட்டது என பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.  ஆனால் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் மகுடம் விருது வழங்கும் விழாவில் கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் வாடிவாசல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.  இதற்கான க்ளுவை தயாரிப்பாளர் தாணு தன்னுடைய சமூக வலைதளப் பகுதியான x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

வாடிவாசல் திரைப்படம் வெற்றிமாறன், சூர்யா, தணு ஆகிய மூவரின் திரை பயணத்திலும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சூர்யா ரெட்ரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இடம்பெற்றுள்ளார். இந்த படத்தை விரைந்து முடித்துக் கொண்டு சூர்யா வாடிவாசல் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க – OTT Spot | 19 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூல்…சம்பவம் செய்த த்ரில்லர் படம்… ஓடிடியில பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

ரெட்ரோ திரைப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த விடுதலை படங்களின் 2 பாகங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. ஏற்கனவே வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படும் நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் நாளை வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.





Source link