Last Updated:

Rambha |வெள்ளித்திரையில் கோலோச்சிய நடிகை ரம்பா தற்போது, சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அது எந்த நிகழ்ச்சி என்பது குறித்து பார்ப்போம்.

News18

வெள்ளித்திரையில் கோலோச்சிய நடிகை ரம்பா தற்போது, சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அது எந்த நிகழ்ச்சி என்பது குறித்து பார்ப்போம்.

1993-ல் வெளியான ‘உழவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் ரம்பா. அதைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர், 2010-ல் வெளியான ‘பெண் சிங்கம்’ படத்தில் தமிழில் கடைசியாக நடித்தார். 2011-ல் வெளியான ‘பிலிம் ஸ்டார்’ மலையாள படத்தில் நடித்தார்.

அதன்பிறகு அவர் வெள்ளித்திரையில் நடிக்கவில்லை. ஆனால், அதன்பிறகு ரியாலிட்டி ஷோக்களான ‘மானாட மயிலாட’, ‘ஜோடி நம்பர் 1’ போன்ற சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். 2017-ல் விஜய் டிவியில் வெளியான ‘கிங் ஆஃப் ஜூனியர்’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இதையும் வாசிக்க: OTT Spot | 5 இரவு…மரண பீதி..இறுதிவரை சஸ்பென்ஸ்…ராட்சசனுக்கு நிகரான த்ரில்லர் படம் பாத்துருக்கீங்களா?

ஆனால், அதன்பிறகு குடும்பத்தில் கவனம் செலுத்தி வந்தவர், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ‘ஜோடி ஆர் யூ ரெடி’ நடன நிகழ்ச்சியின் புதிய சீசனில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் சாண்டி, ஸ்ரீதேவி மற்றும் மீனா ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். இந்த புதிய சீசனில் மீனாவிற்கு பதில் ரம்பா நடுவராக வர இருக்கிறாராம்.



Source link