சிம் கார்டு இல்லாமலேயே ஆடியோ, வீடியோ அழைப்புகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்த இருக்கிறது.

பிஎஸ்என்எல் ஆனது வயாசேட் (Viasat) உடன் இணைந்து ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் இணைக்க அனுமதிக்கும் D2D தொழில்நுட்பத்தை சோதனை செய்து முடித்தது.

பிஎஸ்என்எல் ஆனது டைரைக்ட் டு டிவைஸ் (Direct-to-Device / D2D) தொழில்நுட்பத்தை சோதனை முறையில் நிறைவு செய்துள்ளது, இதைத் தொடர்ந்து இந்த தொழில்நுட்பம் செயல்பாட்டுக்கு வரும்போது வாடிக்கையாளர்கள் சிம் கார்டு அல்லது வழக்கமான நெட்வொர்க் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை செய்ய முடியும். கூடுதலாக, தொடர்பு கொள்ள முடியாத இடங்களில் அல்லது நெட்வொர்க் கிடைக்காதபோது கூட, தடையில்லாமல் தொடர்பு கொள்ள இந்த புதிய தொழில்நுட்பம் உதவும்.

விளம்பரம்

D2D சேவை என்றால் என்ன?

சர்வதேச செயற்கைக்கோள் தகவல் தொடர்பு நிறுவனமான வயாசாட் (Viasat) உடன் இணைந்து, பிஎஸ்என்எல் அதன் டைரைக்ட் டு டிவைஸ் (டி2டி) தொழில்நுட்பத்தை சோதனை செய்து முடித்துள்ளது. வயாசாட்டின் கூற்றுப்படி, ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் இணைக்க அனுமதிக்கும் டைரைக்ட் டு டிவைஸ் (டி2டி) இணைப்பு, ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும். இருக்கும் இடத்தைப் பொருட்படுத்தாமல், தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல் தொடர்புகளுக்கான நம்பகமான இணைப்பை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.

விளம்பரம்

இந்த முன்னேற்றத்தின் விளைவாக, யூசர்களுக்கான பரந்த, நீடித்த கவரேஜ் மற்றும் நம்பகமான தகவல்தொடர்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளில் இந்த தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும்.

டைரைக்ட் டு டிவைஸ் (டி2டி) சேவையின் செயற்கைக்கோள் தொடர்பு மூலம், கேபிள் இணைப்புகள் அல்லது மொபைல் டவர்களைப் பயன்படுத்தாமல் தொழில்நுட்ப சாதனங்களை இதனுடன் நேரடியாக இணைக்க முடியும். சாட்டிலைட் போன்களைப் போலவே, இந்த புதிய தொழில்நுட்பம் ஐஓஎஸ் (iOS) மற்றும் ஆண்ட்ராய்டில் (Android) இயங்கும் ஸ்மார்போன்களுடன் செயல்படுகிறது. எனவே ஸ்மார்ட்வாட்ச்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற ஸ்மார்ட் சாதனங்களை இதன் மூலம் மிகவும் எளிதாக தொடர்பு கொள்ளலாம்.

விளம்பரம்

D2D தொழில்நுட்பத்தின் வெற்றிகரமான சோதனை

பிஎஸ்என்எல் தனது புதிய தொழில்நுட்பங்களை இந்தியா மொபைல் காங்கிரஸின்போது சோதித்தது. நிலப்பரப்பு அல்லாத நெட்வொர்க் இணைப்பைப் பயன்படுத்தி, பிஎஸ்என்எல் மற்றும் வயாசேட் இணைந்து நடத்திய சோதனையின்போது, பயன்பாட்டில் இருக்கும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் SOS மற்றும் இருவழி குறுஞ்செய்தியை (Two-Way Texting) வெற்றிகரமாக சோதிக்க முடிந்தது. 36,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக்கோளில் இருந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் தொலைபேசி உரையாடல் தொடர்ச்சியான தகவல் தொடர்புக்கான ஒரு முதல் படியாகும்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரியல்மி நிறுவனத்தின் அடுத்த அசத்தலான அறிமுகம்… வாடிக்கையாளர்கள் குஷி

இப்போது D2D தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுவிட்டதால், பிஎஸ்என்எல் ஆனது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன்-ஐடியா ஆகிய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு எதிராக செயற்கைக்கோள் இணைப்பு சேவைகளுக்கு போட்டியிடும் நிலையில் உள்ளது.

சிம் கார்டு இல்லாமல் தொடர்பு கொள்ள உதவும் D2D சேவை

டைரைக்ட் டு டிவைஸ் (டி2டி) சேவை மூலம், வழக்கமான நெட்வொர்க் அல்லது சிம் கார்டு இல்லாமல் வாடிக்கையாளர்கள் வீடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை செய்ய முடியும். இந்த சேவையானது ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் கார்கள் கூட செயற்கைக்கோள் நெட்வொர்க்குடன் நேரடி இணைப்பை ஏற்படுத்துவதை சாத்தியமாக்கும்.

விளம்பரம்

மக்கள் எளிதாக அணுகவும், தொடர்பு கொள்ளவும், டிஜிட்டல் யுகத்தில் செழுமையடையவும், இந்த டிரைக்ட் டு டிவைஸ் சேவையானது, குறிப்பாக கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு அதிக பாதுகாப்பு மற்றும் நம்பகமான தகவல் தொடர்புகளை வழங்கும்.

இதையும் படிக்க:
ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டிற்கு தள்ளுபடி அறிவிப்பு…. சிறப்பம்சங்கள், விலை குறித்த தகவல்!

எதிர்காலத்தில் பேரழிவுகள் அல்லது இயற்கைப் பேரிடர்கள் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் D2D சேவைகள் உயிர்காக்கும் எதிர்கால வாக்குறுதியைக் கொண்டுள்ளன. ஆபத்தான சூழ்நிலைகளில் மக்களை மீட்பதில் முக்கிய பங்காற்றுவதன் மூலமும், உதவியை மேம்படுத்துவதன் மூலமும் உயிர் காக்கும் முக்கியமான சேவையை வழங்க முயல்கிறது.

விளம்பரம்

.



Source link