சியோமி நிறுவனம் தனது முதல் 55 இன்ச் ரெட்மி ஃபயர் ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஃபயர் டிவி OS-ல் இயங்கும் இதில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டெண்ட்டும் இணைக்கப்பட்டுள்ளது.

சியோமி நிறுவனம் இந்த வாரம் இந்திய சந்தையில் இரண்டு புதிய மாடல் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், அதன் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி தொடரை புதுப்பித்துள்ளது. புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி சீரிஸ் 43 இன்ச் மற்றும் 55 இன்ச் டிஸ்ப்ளேயுடன் இந்திய சந்தையில் கிடைக்கிறது. மேலும் 55 இன்ச் மிகப்பெரிய டிஸ்ப்ளே உடன் கூடிய ஃபயர் டிவியை சந்தையில் அறிமுகப்படுத்துவது இதுவே முதல் முறை.

விளம்பரம்

இந்த ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி தொடரின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இதில் ஃபயர் டிவி ஓஎஸ் மாற்றப்பட்டுள்ளது, மேலும் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டெண்ட்டும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்களில் கூகுள் டிவி ஓஎஸ் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4K 2024 தொடரின் 43-இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்மார்ட் டிவி ரூ.23,499-ல் கிடைக்கிறது. 55 இன்ச் மாடலின் விலை ரூ.34,499-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் செப்டம்பர் 18 முதல் விற்பனைக்கு வந்துள்ளது. Mi.com அல்லது ப்ளிப்கார்ட் இணைதளம் மூலமாக இந்த ஸ்மார்ட் டிவிகளை வாங்கலாம்.

விளம்பரம்

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4K 2024 தொடர்: சிறப்பம்சங்கள்

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி 4K தொடரின் 2024 பதிப்பு, மெட்டல் பெசல்-லெஸ் டிசைனுடன் வருகிறது. மற்றும் 3 பக்கங்களிலும் பார்டர்லெஸ் டிசைனுடன் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குகிறது. இது 4K HDR டிஸ்ப்ளே, வீடியோ பிராசசிங்குக்கான மோஷன் எஸ்டிமேஷன், மோஷன் காம்பென்சேசன் (MEMC) தொழில்நுட்பம் மற்றும் ஃபயர் டிவி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஃபயர் ஓஎஸ் 7 இணைக்கப்பட்டுள்ளதால், ஸ்மார்ட் டிவி பயனர்கள் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை 12,000க்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை இன்பில்ட் ஆப் ஸ்டோர் மூலம் ஸ்ட்ரீம் செய்யலாம். பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், ஜியோ சினிமா மற்றும் பல ஓடிடி (ஓவர்-தி-டாப் (OTT)) தளங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் எம்எக்ஸ் பிளேயர், மினிடிவி மற்றும் பல ஆப்களை இலவசமாக ஸ்ட்ரீம் செய்யும் வசதியும் உள்ளது.

விளம்பரம்

இரண்டு மாடல்களும் 64-பிட் குவாட்-கோர் பிராசசருடன், 8ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 2ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. 43-இன்ச் மாடல் 24W மற்றும் 55-இன்ச் மாடல் 30W ஸ்பீக்கர் அமைப்புடன் வருகிறது.

ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவியானது ப்ளூடூத் 5.0, டூயல்-பேண்ட் ஒய்-ஃபை, ஏர்ப்ளே 2 மற்றும் மிராகாஸ்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புகைப்படங்களைப் பகிரவும், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும், ஸ்பீக்கர்கள் அல்லது ஹெட்ஃபோன்களை இணைக்கவும் இதனை பயன்படுத்த முடியும்.

Also Read | 
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!

விளம்பரம்

கூடுதலாக, இந்த ஸ்மார்ட் டிவியானது மல்டிடாஸ்கிங்கில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இது அலெக்சா வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் டிவியை பயன்படுத்தவும் மற்றும் வாய்ஸ் அசிஸ்டெண்ட் மூலம் தேவையானற்றை தேடவும் வழி செய்கிறது. மேலும் அலெக்சா வீடியோ பரிந்துரைகளையும் செய்யும். மேலும், குரல் மூலம் கட்டுப்படுத்தக்கூடிய மற்ற அலெக்சாவுக்கு இணக்கமான ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஸ்மார்ட் டிவி ஒரு மையமாக செயல்பட முடியும் என்றும் சியோமி நிறுவனம் கூறியிருக்கிறது.

இது பிரத்யேக அலெக்சா பட்டன், நேவிகேஷன் பட்டன்கள், ஃகைட் பட்டன் மற்றும் பிரைம் வீடியோ, நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் மியூசிக் போன்ற பிரத்யேக OTT ஆப் பட்டன்களுடன் மிகச்சிறிய வடிவத்துடன் வருகிறது.

விளம்பரம்

.



Source link