Last Updated:
இரண்டு டேப்லெட்டுகளிலும் 3K டிஸ்ப்ளே, ஒரு பெரிய பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் ஆகியவை வழங்கப்படுகிறது.
சியோமி பேட் 7 மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்கள் இரண்டும் அவற்றின் பிரிவில் சிறந்த அம்சங்களுடன் வருகின்றன. சியோமி பேட் 7 ஆனது ரூ.26,999 விலையில் தொடங்குகிறது, இது பணத்திற்கு நல்ல மதிப்பை வழங்குகிறது. ஒன்பிளஸ் பேட் 2 ஆனது 144Hz ரெஃபிரேஷ் ரேட் உடன் கூடிய பெரிய 12.1 இன்ச் 3K டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. இரண்டு டேப்லெட்டுகளிலும் 3K டிஸ்ப்ளே, ஒரு பெரிய பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் ஆகியவை வழங்கப்படுகிறது. இரண்டு டேப்லெட்டுகளிலும் உயர்தர புகைப்படங்களுக்காக 13MP ரியர் கேமரா மற்றும் 8MP ஃபிரன்ட் கேமரா ஆகியவற்றை வழங்குகின்றன.
ஆனால் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால், ஒரு இக்கட்டான நிலை ஏற்படலாம். இந்த இரண்டு டேப்லெட்களின் முழு விவரக்குறிப்புகள் பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். இதனையடுத்து இந்த இரண்டு டேப்லெட்டுகளின் விலை, விவரக் குறிப்புகள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்து, இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள். சியோமி பேட் 7 ஆனது HDR10 மற்றும் டால்பி விஷன் ஆதரவைக் கொண்ட 11.2 இன்ச் LCD 3K டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. அதேசமயம் ஒன்பிளஸ் பேட் 2 ஆனது 144Hz ரெஃபிரேஷ் ரேட் உடன் கூடிய 12.1 இன்ச் 3K IPS LCD டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் பேட் 2 ஆனது சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் பேட் 2 ஆனது OxygenOS 14 மூலம் இயங்குகிறது. அதேசமயம், சியோமி பேட் 7 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. அதேசமயம் சியோமி பேட் 7 ஆனது Android 15 அடிப்படையிலான HyperOS 2 மூலம் இயங்குகிறது. மேலும் இதில் பல AI அம்சங்களும் ஆதரிக்கின்றன. இரண்டு டேப்லெட்களிலும் 13MP ரியர் கேமரா மற்றும் வீடியோ அழைப்பிற்காக 8MP செல்ஃபி கேமரா ஆகியவற்றை வழங்குகின்றன. ஒன்பிளஸ் பேட் 2 ஆனது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 9,510mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. அதேசமயம், சியோமி பேட் 7 ஆனது 45W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 8,850mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் சியோமி பேட் 7 இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.29,999 ஆகும். இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.31,999 ஆகும். ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.39,999 ஆகும். சியோமி பேட் 7 டேப்லெட்டை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.5,999க்கு Focus Pen மற்றும் ரூ.4,999க்கு Focus keyboard ஆகியவற்றை வாங்கலாம். இவை அனைத்தும் அமேசான், நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிற ரீடெயில் சேனல்களில் வரும் வாரங்களில் கிடைக்கும்.
January 13, 2025 8:55 PM IST