அந்த வகையில் சியோமி நிறுவனத்தின் Xiaomi 14 Ultra மற்றும் விவோ நிறுவனத்தின் Vivo X100 Pro ஆகியவை பிரபலமான மாடல்களாக உள்ளன. பயனாளர்களுக்கு பிரீமியம் ஃபோட்டோகிராஃபி எக்ஸ்பீரியன்ஸை வழங்க 14 Ultra மொபைலுக்காக சியோமி Leica-வுடனும், X100 Pro மொபைலுக்காக விவோ நிறுவனம் Zeiss-வுடனும் இணைந்ததுள்ளன.
Xiaomi 14 Ultra மற்றும் Vivo X100 Pro இரண்டுமே சுமார் ரூ.1 லட்சம் பட்ஜெட் செக்மென்ட்டை நெருங்க கூடிய அல்ட்ரா-பிரீமியம் மொபைல்கள் ஆகும். இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்துகொள்ளலாம்.
சியோமி 14 அல்ட்ரா (Xiaomi 14 Ultra): இந்த மொபைலின் விலை ரூ.99,999-ஆக உள்ளது. இந்த மொபைல் 120HZ ரெஃப்ரஷ் ரேட், 3200×1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் சப்போர்ட் கொண்ட WQHD+6.73-இன்ச் டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. Android 14-ல் இயங்கும் சியோமியின் 14 Ultra மொபைல் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த மொபைல் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. 16GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது.
இதையும் படிக்க: தயாரிப்பு விலையை விட அதிக விலைக்கு பிக்சல் 9 ப்ரோவை இந்தியாவில் விற்கும் கூகுள் – காரணம் என்ன?
மேலும் இந்த மொபைலில் Snapdragon 8 Gen 3 ப்ராசஸர் கொடுக்கப்பட்டு உள்ளது. இது ஒரு டூயல் சிம் மொபைல் ஆகும். இதன் எடை 219.80 கிராம், பிளாக் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொபைல் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ஸிற்கான IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
விவோ எக்ஸ்100 ப்ரோ (Vivo X100 Pro): இந்த மொபைலின் விலை ரூ.89,999-ஆக உள்ளது. இந்த மொபைல் 120HZ ரெஃப்ரஷ் ரேட், 3,000 nits பீக் பிரைட்னஸ், 2800 × 1260 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட FHD+ 6.73-இன்ச் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 14-ஐ அடிப்படையாகக் கொண்ட சமீபத்திய Funtouch OS 14-ல் இயங்குகிறது. மேலும் இதில் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5,400mAh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Triumph நிறுவனத்தின் 2025 Tiger 1200 மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?
விவோவின் இந்த மொபைல் MediaTek Dimensity 9300 ப்ராசஸரை கொண்டுள்ளது. சியோமி 14 அல்ட்ரா மொபைலை போலவே இந்த மொபைலிலும் 16GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது.
கேமரா ஸ்பெசிஃபிகேஷன்கள்: கேமரா அம்சங்களை பொறுத்தவரை Xiaomi 14 Ultra மொபைல் 50MP பிரைமரி லென்ஸ், ஃப்ளோட்டிங் டெலிஃபோட்டோ லென்ஸ், பெரிஸ்கோப் லென்ஸ் மற்றும் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய Leica 50MP குவாட் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
அதே நேரம் Vivo X100 Pro மொபைலானது 50MP Sony IMX989 (OIS) ரியர் கேமரா, 50MP வைட்-ஆங்கிள் AF லென்ஸ் மற்றும் 50MP டெலிஃபோட்டோ (OIS) லென்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
November 18, 2024 3:17 PM IST