சிரியாவில் உள்நாட்டு போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிரியாவில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் பஷர் அல்-அசாத் ஆட்சி செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக, துருக்கி ஆதரவு அமைப்பான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் இடையே உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ளது.
சிரியாவின் 2 ஆவது மிகப்பெரிய நகரமான அலெப்போ மற்றும் ஹமா போன்ற சிரிய நகரங்களை கிளரச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், சிரியாவின் முக்கிய நகரமான ஹோம்ஸின் வாயிலை கிளர்ச்சியாளர்கள் நெருங்கியதால், உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அந்நாட்டில் இருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவித்துள்ளது.சிரியாவில் இருந்து வெளியேற முடியாதவர்கள், அந்நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு இந்திய வெளியேறவுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், சிரியாவில் உள்ளவர்கள் டமாஸ்கசில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு பிரத்யேக தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
.