சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அண்டை நாடுகளுடனோ அல்லது மேற்கத்திய நாடுகளுடனோ போருக்கு தயாராக இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், பழைய ஆட்சியை குறிவைத்து சிரியா மீது விதிக்கப்பட்ட அனைத்து தடைகளும் இப்போதே நீக்கப்பட வேண்டும் என்று சிரியாவின் புதிய ஆட்சியாளர் கூறியுள்ளார்.
பெண்களுக்கு கல்வி வழங்கப்பட வேண்டும் எனவும், ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் பெண்களின் வீதம் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.