அமெரிக்கா நடத்திய இரு தாக்குதல்களில் சிரியாவில் 37 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் வடமேற்கு சிரியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. அதில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய குழுவைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவா் உள்பட குறிவைக்கப்பட்ட 9 பேரும் கொல்லப்பட்டனர்.

அதேபோல செப்டம்பர் 16ஆம் தேதி மத்திய சிரியாவில் ஐ.எஸ். பயிற்சி முகாம் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் 28 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு 2014ஆம் ஆண்டில், ஈராக் மற்றும் சிரியாவில் பெரும் நிலப்பரப்பைக் கைப்பற்றியது. சிரியாவில் இது மீண்டும் நடைபெறாமல் தடுக்க தற்போது அமெரிக்க படையைச் சோ்ந்த 900 வீரா்கள் அங்கு உள்ளனா்.

விளம்பரம்

இதையும் படிங்க:  லெபனானில் தீவிரமடையும் தாக்குதல்.. ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹாஸிம் சபிதீன் தேர்வு!

வடகிழக்கு சிரியாவில் செயல்படும் குா்திஷ் படைப் பிரிவுகளுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த குா்திஷ் படைப் பிரிவு சிரியா அரசுக்கு எதிராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

.

  • First Published :



Source link