தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு அமைய, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP) 11 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சிகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கல் பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.வி. கினிகே, மாத்தறைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.