அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலாநிதி ஏ.எல்.எம்.றிப்கி, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கலாநிதி றிப்கியின் சாதனைப் பயணம் உண்மையிலேயே அபரிதமானது.
இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியான இவர், உணவு விஞ்ஞானத்தில் முதுகலை (MSc) பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து உஸ்பகிஸ்தானில் உணவுத் தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து ஆகியவற்றில் முனைவர் (Ph.D) பட்டமும் பெற்றார். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமாணி (LLB) பட்டத்தையும் பெற்றுள்ள இவர், உயர் நீதிமன்ற சட்டத்தரணியும் ஆவார். விஞ்ஞானம் மற்றும் சட்டம் ஆகிய இரண்டு துறையிலும் பரந்த நிபுணத்துவம் கொண்ட கலாநிதி றிப்கி, நம் சமூகத்துக்கும் இப் பிரதேசத்திற்கும் கிடைத்த ஒரு நம்பிக்கைக்குரிய கல்விமானாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
(அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்)
The post சிரேஷ்ட விரிவுரையாளராக Dr. ஏ.எல்.எம். றிப்கி appeared first on Thinakaran.