சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி, அரச வங்கிகளின் ஊடாக, சலுகை வட்டி விகிதத்தில் இந்த கடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.