உலகிலேயே முதல் முயற்சியாக சமூக வலைதளங்களை 16 வயதுக்கு உட்பட்ட சிறார் பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை ஆஸ்திரேலியா நடைமுறைப்படுத்த உள்ளது.

சிறார் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடுக்க புதிய வயது பரிசோதனை நுட்பத்தையும் கட்டமைப்பையும் அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்துகிறது. ஆன்லைனில் குழந்தைகள் பாதுகாப்பே முக்கியம் என்பதற்காக இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீஸ், குழந்தைகள் மற்றும் பதின்ம வயதுடையவர்களை மனதளவில் பாதிக்கும் வகையில்
சமூக வலைதளங்கள் இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Also Read: 
அமெரிக்கா, இங்கிலாந்து அல்ல! உலகிலேயே மிக விலையுயர்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடு எது? அதன் விலை தெரியுமா?

16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டம் இந்த ஆண்டு இறுதிக்குள் கொண்டு வரப்படும் எனவும், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற ஒப்புதலுக்குப் பின் 12 மாதங்களுக்குப் பிறகு விதிகள் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. முக்கிய அம்சமாக, பெற்றோரின் ஒப்புதல் இருந்தாலும் குழந்தைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படாது எனவும், சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் ஏற்கனவே சமூக ஊடகங்களில் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:
உலக அழிவின் முதல் அறிகுறியா..? பாலைவனத்தில் 35 மைல் நீள விரிசல்.. விஞ்ஞானிகள் அதிர்ச்சி ரிப்போர்ட்!

16 வயதுக்கு உட்பட்டவர்கள் பயன்படுத்துவதை கண்டறிந்தால், குழந்தைகளுக்கோ, பெற்றோருக்கோ எந்த அபராதமும் இருக்காது எனவும், சமூக வலைதள நிறுவனங்களே அதற்கு முழு பொறுப்பேற்கும் வகையில் சட்டம் இயற்றப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

.



Source link