அமெரிக்காவில் உள்ள சிறையில் இரு கைதிகள் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே குழந்தை பெற்றெடுத்துள்ளனர். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் மியாமியில் டர்னர் கில்ஃபோர்ட் சிறை உள்ளது. இந்த சிறையில், கொலை குற்றத்தில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்ட டெய்சி லிங்க் (29) எனும் பெண் கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே சிறையில், ஜோன் டெபாஸ் (24) எனும் ஆண் கைதி வேறு ஒரு குற்றவழக்கில் மற்றோரு தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

விளம்பரம்

இவர்கள் இருவரும் இதுவரை ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கிடையாது. ஆனால், இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. இது சிறை நிர்வாகம் உட்பட அனைவரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.

சளி, இருமலை போக்க உதவும் எலுமிச்சை மற்றும் கிராம்பு தண்ணீர்… எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.?


சளி, இருமலை போக்க உதவும் எலுமிச்சை மற்றும் கிராம்பு தண்ணீர்… எவ்வாறு பயன்படுத்த வேண்டும்.?

டெய்சி, கடந்த ஜூலை மாதம் சிறையில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அப்போது சிறை நிர்வாகமும், மருத்துவர்களும் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தியதில், அந்தக் குழந்தைக்கு டெபாஸ் தான் தந்தை என தெரியவந்துள்ளது. மருத்துவ முடிவுகளும் டெபாஸ் தான் தந்தை என்பதை உறுதி செய்துள்ளது.

விளம்பரம்

இது குறித்து விசாரித்தபோது, டெய்சி மற்றும் டெபாஸ் இருவரும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இருவரின் சிறையையும் ஏசி வென்ட் இணைத்துள்ளது. இருவரும் அதன் வழியாகப் பேசி பழகியுள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. அப்போது டெபாஸ், தனக்கு குழந்தை பெற்றுக்கொண்டு தந்தையாக வேண்டும் என்று ஆசை இருப்பதாக டெய்ஸியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு தற்போது வாய்ப்பில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊற வைத்த திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!


ஊற வைத்த திராட்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!

இதனைக் கேட்ட டெய்சி வருத்தம் அடைந்துள்ளார். பிறகு இருவரும் திட்டமிட்டுள்ளனர். அப்போது அவர்கள் வழக்கமாகப் பேசிக்கொள்ள பயன்படுத்தும் அந்த ஏசி வெண்டை பயன்படுத்தியுள்ளனர். டெய்சி அறையில் இருந்து டெபாஸ் அறைக்கு ஏசி வென்ட் மூலம் ஒரு பெட்ஷீட்டை அனுப்பிப் பார்த்துள்ளார். அது நேரடியாக டெபாஸ் அறைக்கு வந்துள்ளது. எனவே அதனை இருவரும் பயன்படுத்தியுள்ளனர்.

விளம்பரம்

டெய்ஸி தனது அறையில் இருந்து டெபாஸ் அறைக்கு பெட்ஷீட்டை அனுப்பியுள்ளார். டெபாஸ், தனது விந்து அணுவை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு அந்த பெட்ஷீட்டில் கட்டிவிடுவார். பிறகு டெய்ஸி அந்த பெட்ஷீட்டை இழத்து அதில் பிளாஸ்டிக் கவரில் இருக்கும் டெபாஸின் விந்து அணுவை தனது பிறப்புறுப்பின் வழியாகத் தனக்குள் செலுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள் :
“பாஜக நடவடிக்கையை தடுக்க வேண்டும்” – தேர்தல் ஆணையத்தைச் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்

ஒரு நாளைக்கு ஐந்து முறை என ஒரு மாதத்திற்கு இதனை அவர்கள் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்தே அவர் கர்ப்பமுற்று குழந்தை பெற்றெடுத்துள்ளார்.

விளம்பரம்

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமுறை கூட சந்தித்தது இல்லை என சிறை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அதேசமயம் குழந்தைக்கு நடத்தப்பட்ட மரபணு சோதனையில் டெபாஸ் தான் குழந்தைக்கு தந்தை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

.



Source link