அண்மையில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை ஆங்கில தினப்போட்டியில் தரம் 08க்குரிய சொல்வதெழுதல் (Dictation) போட்டியில் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியின் மாணவி அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இதன் மூலம் இம்மாணவி அதிபர் உட்பட ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் தெரிவித்தார்.
பாடசாலை நிர்வாகம் தனது வாழ்த்துக்களை இம்மாணவிக்கும் ஆங்கிலப் பிரிவின் ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவியின் பெற்றோர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறது.
புத்தளம் தினகரன் நிருபர்
The post சிலாபம் நஸ்ரியா மாணவி சாதனை appeared first on Thinakaran.