தீபாவளி (31-10-2024) அன்று சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் தான் ‘அமரன்’. ‘ரங்கூன்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர்.
ரிலீசுக்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருந்தது. அதற்கு முக்கிய காரணம் காஷ்மீரில் தீவிரவாதிகளை வீழ்த்தி வீரமரணமடைந்து, உயரிய விருதான அசோக சக்ராவைப் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் கதை என்பதுதான். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி அன்று திரையரங்குகளில் அமரன் வெளியானது. படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை பெற்று, பார்வையாளர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.
‘அமரன்’ படக் குழுவினருக்கு முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் பாராட்டு தெரிவித்தனர். திரையரங்கில் சக்கை போடு போட்ட இந்த படம் தற்போது Netflix ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமாகி வருகிறது. தற்போது அமரன் படம் உலகம் முழுவதும் செய்துள்ள இறுதி வசூல் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:
Pushpa 2 Box Office Collection : புஷ்பா 2 படத்தின் 2வது நாள் வசூல் விவரம்!!
அதன்படி, படம் வெளியான முதல் நாளே வசூல் வேட்டையை தொடங்கியது. உலகளவில் இந்த படம் ரூ. 399 கோடி வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல், 2024ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த 2வது படம் என்ற இடத்தை பிடித்துள்ளது அமரன்.
.