சிவனொளிபாத யாத்திரை நாளை 14ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன் உடமலுவ பகுதியை அலங்கரிப்பதற்காக இம்முறை 30 இலட்சம் மலர்களை உபயோகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிவனொளிபாத யாத்திரை இம்முறை பூரணை தினத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன் வழமையை விட இம்முறை ஆரம்ப நிகழ்வு விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 7,000 யார் மல்லிகைப்பூக்களினால் உடமலுவ பிரதேசம் அலங்கரிக்கப்படவுள்ளது.

அதன்படி, இன்று 13 ஆம் திகதி அதிகாலை இரத்தினபுரி, அவிசாவளை, ஹட்டன் ஊடாக நல்லதண்ணி வரை ஒரு பெரஹரவும் இரத்தினபுரி, பலாபத்தல ஊடாக மற்றுமொரு பெரஹெரவும் குருவிட்ட, எரந்த வீதியூடாக ஒரு பெரஹெரவும் மற்றும் பலாங்கொடை பொகவந்தலாவை வீதியூடாக மற்றுமொரு பெரஹெரவும் பயணிக்கவுள்ளது.

இதனையடுத்து, 14 ஆம் திகதி சனிக்கிழமை சமன்தேவ சிலை, சதாதுக கரண்டுவ மற்றும் பூசைப் பொருட்கள் சிவனொளிபாத உடமலுவைக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு நடைபெறும் மத வழிபாட்டுடன் 2024/2025 க்கான சிவனொளிபாத யாத்திரை ஆரம்பமாகும்.

இம்முறை நல்லதண்ணியிலிருந்து உடமலுவ வரை பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல் விற்பனை செய்தல், புகையிலை உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்லவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

The post சிவனொளிபாதமலை யாத்திரை நாளை ஆரம்பம் 30 இலட்சம் மலர்களால் அலங்காரம் appeared first on Thinakaran.



Source link