சீனாவில் மகாராஜா திரைப்படம் இரண்டு நாட்களில் செய்த வசூல் எவ்வளவு என்று இங்கே பார்ப்போம்.

குரங்கு பொம்மை புகழ் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படம் தான் ‘மகாராஜா’. இதில், விஜய் சேதுபதி, பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, முனீஸ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவான இப்படத்தின் திரைக்கதை பார்வையாளர்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த படம் ஓடிடியில் வெளியாகி அதிலும் ட்ரெண்டிங்கில் இருந்தது. 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியான திரைப்படங்களில் ‘மகாராஜா’ படம் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இந்த படம் சுமார் ரூ.110 கோடி வசூல் சாதனை படைத்தது.

விளம்பரம்

News18

Also Read:
நயன்தாரா பாணியில் நாகசைதன்யா திருமண ஒளிபரப்பை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் – எவ்வளவு கோடி தெரியுமா?

இதற்கிடையே, மகாராஜா திரைப்படம் சீனாவில் 40,000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த சனிக்கிழமை அன்று, மகாராஜா படத்தின் பிரிமியர் காட்சிகளில் திரையிடப்பட்டன. அதில் 1.09 கோடியை மகாராஜா படம் ஈட்டியது. இந்நிலையில், மகாராஜா திரைப்படத்திற்கு சீனாவில் போதிய வரவேற்பு இல்லை என்ற விமர்சனமும் ஒருபுறம் இருந்து வருகிறது. இதற்கிடையே, படத்தின் இரண்டாம் நாள் வசூல் ரூ.1.26 கோடியாக உயர்ந்து உள்ளது. 2 நாள் வசூலில் பாக்ஸ் ஆபிஸில் மகாராஜா திரைப்படம் ரூ.2.35 கோடி வசூலித்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

.



Source link