இது மக்களுக்கு தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதனால் சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிவதாக சோஷியல் மீடியா பதிவுகளில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சாதாரண காய்ச்சலை போன்ற அறிகுறிகள் கொண்ட இந்த HMPV மோசமான சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இதனால் பாதிக்கப்படலாம். இந்த HMPV வைரஸ் பற்றிய விளக்கமான தகவல்களை இப்போது பார்க்கலாம்.
HMPV என்றால் என்ன? சீனாவில் இது ஏன் தற்போது ஒரு தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது?
HMPV என்ற சுவாச தொடர்புடைய வைரஸ் மேல் மற்றும் கீழ் சுவாச தொற்றுகளை ஏற்படுகிறது. இது அனைத்து வயதினரையும் பாதிக்கலாம். அதிலும் குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் வலுவிழந்த நோய் எதிர்ப்பு அமைப்பு கொண்டவர்கள் இந்த தொற்றுக்கு முதலில் ஆளாகலாம். இது முதன்முதலாக 2001ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
HMPV ஏற்படுத்தும் அறிகுறிகள் என்ன?
இது வழக்கமான காய்ச்சல் மற்றும் பிற சுவாச தொற்றுகளைப் போன்ற அறிகுறிகளை கொண்டிருக்கும். இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பொதுவான அறிகுறிகள் இதில் அடங்கும். மோசமான சூழ்நிலைகளில் இந்த வைரஸ் பிரான்கைட்டிஸ் அல்லது நிமோனியா போன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பிரச்சனைகளை உருவாக்கலாம். பொதுவாக இதன் அறிகுறிகள் தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 நாட்களுக்குள் ஆரம்பிக்கிறது.
HMPV வைரஸ் பரவுமா?
HMPV வைரஸ் என்பது பிற சுவாச வைரஸ்களை ஒத்திருக்கும். இது இருமல் மற்றும் தும்மல் மூலமாக வெளியாகும் எச்சில், நெருங்கிய உடல்ரீதியான தொடர்பு (கை கொடுத்தல் அல்லது தொடுதல்) மற்றும் பாதிக்கப்பட்ட மேற்பரப்புகளை தொட்ட பிறகு மூக்கு, வாய் அல்லது கண்களை தொடுதல் போன்றவை மூலமாக பரவலாம்.
HMPV வைரஸ் ஏற்படுவதற்கான அதிக ஆபத்தில் இருப்பவர்கள் யார் யார்?
- குழந்தைகள்
- சிறுவர்கள் மற்றும் வயதானவர்கள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள்
HMPV ஏற்படாமல் தடுப்பது எப்படி?
- அவ்வப்போது கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி 20 வினாடிகளுக்கு கழுவவும்.
- கைகளை கழுவாமல் முகத்தை தொட வேண்டாம்.
- உடல்நலக் குறைவு இருப்பவர்களிடம் நெருங்கிச் செல்ல வேண்டாம்.
- வீட்டின் மேற்பரப்புகள், தாழ்ப்பாள் மற்றும் பொம்மைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
இதையும் படிக்க: ISRO Achievement: விண்வெளியில் தாவரங்களை வளர்த்து சாதனை… புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ..!
HMPV அறிகுறிகளை அனுபவிப்பவர்கள் என்னென்ன விஷயங்களை பின்பற்ற வேண்டும்?
- தும்மல் அல்லது இருமும்போது அதன் மூலமாக எச்சில் பரவாமல் இருக்க ஒரு கைக்குட்டை அல்லது டிஷ்யூ மூலமாக மூடிக்கொள்ளவும்.
- அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் தண்ணீர் வைத்து குறைந்தபட்சம் 20 வினாடிகளுக்காவது கழுவவும்.
- உங்களுடைய தனிப்பட்ட பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- உடல்நிலை சரியாக இல்லாவிட்டால் வீட்டிலேயே இருக்கவும். வெளியில் செல்வது பிறருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.
HMPV தொற்றுக்கு சிகிச்சை அல்லது தடுப்பூசி உள்ளதா?
HMPV தொற்றுக்கு எந்த ஒரு குறிப்பிட்ட ஆன்டி வைரல் சிகிச்சை அல்லது தடுப்பூசி கிடையாது. அறிகுறிகளை தணிக்கவும், சிக்கல்கள் தீவிரம் அடையாமல் பார்த்துக் கொள்ளவும் மருத்துவ பராமரிப்பைப் பெற்றுக் கொள்ளலாம்.
இதையும் படிக்க: Donald Trump: டிரம்புக்கு அடுத்த நெருக்கடி.. ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் ஜன.10ல் தண்டனை அறிவிப்பு!
HMPV தொற்றுக்கும், கோவிட்-19 தொற்றுக்கும் என்ன தொடர்பு?
HMPV மற்றும் கோவிட்-19 ஆகிய இரண்டுமே இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் கொண்டு, சுவாச துளிகள் மூலமாக பரவும் ஒரே மாதிரியான தொற்றுகள் ஆகும். மோசமான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை வரலாம். HMPV குறிப்பாக குளிர்காலத்தில் அதிகம் பரவுகிறது. ஆனால் கோவிட்-19 பாரபட்சம் பார்க்காமல் வருடம் முழுவதும் ஆக்டிவாக இருக்கும்.
January 05, 2025 9:37 AM IST