சீனியர்கள் ரன்கள் குவிக்காவிட்டால் பிரச்னை ஏற்படும் என்று விராட் கோலி உள்ளிட்டோர் ரோஹித் சர்மா விமர்சித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.

25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மேட்ச்சில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்களும், இந்தியா 263 ரன்களும் எடுத்திருந்தது. 2 ஆவது இன்னிங்ஸில் நியூசிலாந்து 174 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

விளம்பரம்

இருப்பினும் 29.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 121 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது-

சீனியர்கள் ரன்கள் குவிக்காவிட்டால் அப்போது பிரச்னை ஏற்படும். முடிந்தது முடிந்து விட்டது. ஒரு பேட்ஸ்மேனாக, கேப்டனாக, ஒரு அணியாக இந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு முயற்சிப்போம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. அதன் மீதுதான் இப்போது கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மாவின் பேட்டிங் டெஸ்ட் போட்டிகளில் கவலை அளிப்பதாக உள்ளது. ரோஹித் சர்மா கடந்த 10 இன்னிங்ஸ்களில் மொத்தமே 133 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இவரது சராசரி 13.30 ஆக உள்ளது.

இதேபோன்று விராட் கோலி கடந்த 10 இன்னிங்ஸ்களில் மொத்தம் 192 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு இன்னிங்ஸில் 70 ரன்கள் சேர்த்தார். இதை தவிர்த்து பார்த்தால் 9 இன்னிங்ஸ்களில் 122 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார் விராட் கோலி.

விளம்பரம்

இதையும் படிங்க – IND vs NZ | 147 ரன்களை சேஸிங் செய்ய முடியாத இந்திய அணி… கோட்டை விட்டது எங்கே?

விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ஏராளமான சாதனைகளை ஏற்படுத்தியிருந்தாலும், மும்பை டெஸ்டில் 147 ரன்களை இந்திய அணி எடுக்க முடியாமல் போனது அவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

.



Source link