நாட்டில் சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சீனி கம்பனிக்கு சொந்தமான பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளுக்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி நேற்று (03) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, கரிம உரம் மற்றும் ஏற்றுமதி சந்தையை இலக்காகக் கொண்டு கரிம சீனி உற்பத்தி தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீனி உற்பத்தியை விநியோகிப்பதற்கான முறையான விநியோக வலையமைப்பை உருவாக்குவது மற்றும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்க வேலை சுட்டெண்ணை தயாரிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
The post சீனி உற்பத்தியினை அதிகரிப்பதில் விசேட கவனம் appeared first on Daily Ceylon.