Last Updated:
உலகில் உள்ள அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகளை விடவும் இவரது சம்பளம் அதிகம். இவருடைய ஒரு நாள் சம்பாத்தியத்தை கணக்கிட்டால் அந்த எண்ணிக்கையே ரூ.48 கோடி வந்துவிடும். ஒட்டுமொத்தமாக ஆண்டு ஒன்றிற்கு இவரது சம்பளம் ரூ.17,500 கோடி. இவ்வளவு பெரிய சம்பள பேக்கேஜைப் பெற ஜக்தீப் சிங் அப்படி என்ன வேலை செய்கிறார் என்பதை அறிய உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது அல்லவா? விரிவாக…மேலும் படிக்கவும்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜக்தீப் சிங் பற்றி தற்போதெல்லாம் அதிகமாக பேசப்படுவதை பார்க்க முடிகிறது. சோசியல் மீடியாவில் அவ்வப்போது அவரது பெயரும் முகமும் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம், ஜக்தீப் சிங் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் ஊழியர் ஆவார்.
உலகில் உள்ள அனைத்து தலைமை நிர்வாக அதிகாரிகளை விடவும் இவரது சம்பளம் அதிகம். இவருடைய ஒரு நாள் சம்பாத்தியத்தை கணக்கிட்டால் அந்த எண்ணிக்கையே ரூ.48 கோடி வந்துவிடும். ஒட்டுமொத்தமாக ஆண்டு ஒன்றிற்கு இவரது சம்பளம் ரூ.17,500 கோடி. இவ்வளவு பெரிய சம்பள பேக்கேஜைப் பெற ஜக்தீப் சிங் அப்படி என்ன வேலை செய்கிறார் என்பதை அறிய உங்களுக்கு ஆர்வமாக இருக்கிறது அல்லவா? விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
இவரது கதை ஒரு தனி நபரின் கதை அல்ல; ஆனால் அதேசமயம் இந்திய திறமையாளவர் ஒருவருக்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம். உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பெயரை தற்போது ஜக்தீப் சிங் பெற்றுள்ளார். எலெக்ட்ரிக் வாகன பேட்டரிகளின் தொழில்நுட்பத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்ற இவரது வாழ்க்கைப் பயணம் அனைவருக்கும் சிறந்த எடுத்துகாட்டாகும்.
குவாண்டம்ஸ்கேப்பின் நிறுவனர்:
ஜக்தீப் சிங் 2010-ல் QuantumScape என்ற நிறுவனத்தை தொடங்கினார். இந்த நிறுவனம் புதிய தலைமுறை திட-நிலை பேட்டரிகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தி செய்கிறது. இந்த பேட்டரிகள் மின்சார வாகனங்களின் ஆற்றல் திறனை அதிகரிக்கின்றன மற்றும் சார்ஜ் ஏறும் நேரத்தை குறைக்கின்றன. இது எலக்ட்ரிக் வாகன உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். ஜக்தீப் சிங்கின் தொலைநோக்கு சிந்தனை மற்றும் தலைமைத்துவம், இந்நிறுவனத்திற்கு பெரும் புகழைக் கொண்டு வந்தது. இதன் காரணமாக வோக்ஸ்வாகன் மற்றும் பில் கேட்ஸ் போன்ற தொழில்துறை ஜாம்பவான்கள் அவரை நம்பி கோடிக்கணக்கான பணத்தையும் முதலீடு செய்தனர்.
குவாண்டம்ஸ்கேப் நிறுவனத்தில் சேர்வதற்கு முன், ஜக்தீப் சிங் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். இந்த அணுபவம் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஆழமாகப் புரிந்துகொள்ள அவருக்கு வாய்ப்பளித்தது. இன்னொரு காரணம், அவருடைய கல்வியும் சிறப்பாக இருந்தது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பி.டெக் மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ முடித்துள்ளது அவரது திறமைக்கு சான்றாகும்.
நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத சம்பளத்தை தற்போது ஜக்தீப் சிங் பெற்று வருகிறார். அதில் ரூ.19,000 கோடி (சுமார் $2.3 பில்லியன்) மதிப்புள்ள பங்கு விருப்பங்களும் அடங்கும். அவரது தனிப்பட்ட சாதனைகள் மற்றும் குவாண்டம்ஸ்கேப்பின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டு இந்த சம்பள தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கிடையில் பிப்ரவரி 16, 2024 அன்று, சிங் குவாண்டம்ஸ்கேப்பின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்து, நிறுவனத்தின் தலைமை பொறுப்பை சிவ சிவராமிடம் ஒப்படைத்தார்.
தற்போது “ஸ்டெல்த் ஸ்டார்ட்அப்” இன் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜக்தீப் சிங் பணியாற்றி வருகிறார். தற்போது அவர் புதிய தொழில்நுட்பத்தில் பணிபுரிந்து வருவதை அவரது சோசியல் மீடியா கணக்கு (@startupjag) மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. நிச்சியம் இது எதிர்காலத்தில் பல அற்புதங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம்.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ-க்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அவர் 2004-ல் கூகுளில் சேர்ந்தார். ஏப்ரல் 2023 தரவுகளின்படி, அவரது ஆண்டு சம்பளம் ரூ.1663 கோடி. இவர் சம்பளம் மட்டுமின்றி பல சலுகைகளையும் பெற்று வருகிறார். இவை அனைத்தையும் சேர்த்து அவருக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1854 கோடி கிடைக்கிறது. அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு, ரூ.5 கோடி வருகிறது.
January 05, 2025 10:07 AM IST