Last Updated:
அணியில் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் சூழலில் கில்லுக்கு எதற்காக துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக பேட்ஸ்மேன் சுப்மன் கில்லும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் எதன் அடிப்படையில் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கியது விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நெட்டிசன்கள் எதன் அடிப்படையில் அவருக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அணியில் ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், ஜஸ்பிரித் பும்ரா போன்ற அனுபவம் மிக்க வீரர்கள் இருக்கும் சூழலில் கில்லுக்கு எதற்காக துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்தில் நடைபெ நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இழந்தது.
இந்த தோல்வியில் இருந்து மீண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் எது விளையாடுகிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்னதான கடைசி தொடர் இது என்பதால் இதனை கைப்பற்ற இந்தியா தீவிரம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
January 18, 2025 3:47 PM IST