Last Updated:
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேப்டனுக்கான போட்டியில் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருப்பது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இருப்பினும் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக தான் விளையாடும் அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுகிறது.
இதற்கிடையே இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ரோகித் சர்மா நீடிக்கிறார். துணை கேப்டன் பொறுப்புக்கு சுப்மன் கில்லை தேர்வு குழு நியமித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட வீரர்கள் இருக்கும்போது சுப்மன் கில் எதற்காக நியமிக்கப்பட்டார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும் எந்த அடிப்படையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் சுப்மன் கில் பெயர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
இந்நிலையில் சுப்மன் கில்லை துணை கேப்டனாக நியமித்தது குறித்து தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது-
இலங்கை சுற்றுப்பயணத்தில் சுமன் கில் துணை கேப்டனாக பொறுப்பில் இருந்தார். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து நிறைய ஆலோசனைகள் எங்களுக்கு வந்தன. இதில் முக்கிய வீரர்கள் அணியை வழிநடத்த தயாராக இல்லை. ஒரு சிலரிடம் தலைமை பண்பு இருக்கும். அதன் அடிப்படையில் அவர்கள் பொறுப்பை பெறுவார்கள் என்று மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.
இதையும் படிங்க – BCCI: பிசிசிஐ கட்டுப்பாடுகளை மீறினால் என்ன தண்டனை? வெளியான தகவல்
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேப்டனுக்கான போட்டியில் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர். மூத்த வீரர் பும்ராவை பொறுத்த அளவில் அவர் டெஸ்ட் போட்டிகளின் கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஓவர் போட்டிகளை பொறுத்த அளவில் சூரியகுமார் யாதவ் கேப்டன்ஷிப்பில் தொடர்வார்.
January 19, 2025 9:18 PM IST