சூதுகவ்வும் – 2 திரைப்படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புரோமோ வெளியிட்டுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் சூதுகவ்வும். இந்த படத்தில் அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இந்நிலையில், சூதுகவ்வும் படத்தின் 2 ஆம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதே தலைப்பை பயன்படுத்தி இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தை நளன் குமாரசாமி இயக்கியிருந்தார். தற்போது இரண்டாம் பாகத்தை எஸ்.ஜே.அர்ஜுன் என்பவர் இயக்கியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

சூதுகவ்வும் இரண்டாம் பாகத்தில் சிவா, எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி, கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். முதல் பாகம் வெளியாகி 11 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியிருக்கும் சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டுள்ளது.

.

  • First Published :





Source link