பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பிரபல நடிகர் சூர்யா காம்போவில் உருவாகியுள்ள படம் ‘சூர்யா 44’. சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் சில நாட்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் நிச்சயம் மெகா ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இதையடுத்து சூர்யா நடித்துள்ள ‘சூர்யா 44’ படத்தின் மீதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது அதிகமாக உள்ளது.

விளம்பரம்

படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கேங்ஸ்டர் ஜானரில் இந்த படம் உருவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் மீதான ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.

அந்தமான், ஊட்டி என பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்த படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் லவ் கதை இயக்கினால் எப்படி இருக்குமோ அப்படி இந்த படம் இருக்கும் என்று அண்மையில் நடிகை பூஜா ஹெக்டே படம் குறித்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், படம் குறித்த மற்றுமொரு சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

விளம்பரம்
விளம்பரம்

நடிகை ஸ்ரேயா சூர்யாவின் 44வது படத்தில் இணைந்துள்ளார் என்றும் படத்தில் அவர் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளதாகவும் சமீபத்தில் தான் அந்த பாடலின் காட்சி ஷூட்டிங் செய்யப்பட்டது என்றும் தகவல்கள் வெளியானது. ஆனால் அது உண்மையா இல்லை வதந்தியா என்று ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் தற்போது அந்த தகவலை நடிகை ஸ்ரேயாவே காணொளி ஒன்றில் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், ” ‘சூர்யா 44’ படத்திற்காக மிகவும் அழகான சின்ன பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளேன், உங்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார். இந்த காணொளி தற்போது வைரலாகியுள்ளது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிகை ஸ்ரேயாவை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விளம்பரம்

.

  • First Published :





Source link