Last Updated:

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவுக்கு கம் பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

News18

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக் குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து, இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆக்சன் கலந்த காதலை மையமாக வைத்து ரெட்ரோ திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தின் க்ளிம்ஸ் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. அதேபோல் படத்தின் தலைப்பை சமீபத்தில் அறிவித்த படக்குழுவினர், படம் எப்போது வெளியாகும் என்பதை அறிவிக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மே மாதம் 1 ஆம் தேதி ரெட்ரோ திரைப்படம் வெளியாகும் என அறிவித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். அதேபோல் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

இதையும் படிங்க – ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா? ஜெயிலர் வெளியீட்டை ஃபாலோ பண்ணும் சன் பிக்சர்ஸ்!!

இந்த நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரெட்ரோ திரைப்படம் சூர்யாவுக்கு கம் பேக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.





Source link