கஸ்தூரி ராஜா இயக்கத்தில் 1991ல் வெளிவந்த ‘ஆத்தா உன் கோயிலிலே’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை கஸ்தூரி. 1974ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த கஸ்தூரி, 1992ல் சென்னை அழகி பட்டத்தை வென்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கஸ்தூரி, சத்யராஜ், விஜயகாந்த், கமல்ஹாசன் என பலரோடும் நடித்து மக்களை கவர்ந்தார். ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ள நிலையில் 2001க்கு பிறகு சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில், 2015-ஆம் ஆண்டு, தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மேலாடை இன்றி கஸ்தூரி குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படம் வெளியாகி பேசுபொருளானது.
ஏ பியூட்டிஃபுல் பாடி புராஜெக்ட்: பாடி ஆஃப் மதர்ஸ் என்ற பெயரில் சர்வதேச அளவில் 80 பெண்களின் படங்கள் விழிப்புணர்வுக்காக வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, தமிழ், தெலுங்கு என தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்திய கஸ்தூரி, தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கெடுத்தார். எப்போதும், சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி, விஜயோ, அமிதாப் பச்சனோ சினிமாவை விட்டு போவதால், சினிமாவுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது என காரசாரமாக கருத்து தெரிவித்தார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, திமுக கூட்டணிதான் வெற்றிபெறும் என்றார். ஆனால், அடுத்த சில நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அதிமுகவில் இணையப் போகிறார் என பேச்சு எழுந்த நிலையில், சில காலம் அமைதியாக இருந்தவர், மதுரையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு வாக்களிக்க கோரி வீடியோ வெளியிட்டு பரப்புரை செய்தார்.
இதையும் படிங்க:
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போகும் பெண் போட்டியாளர்.. அட இவரா..!!
அண்மையில் இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் மக்கள் குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது. கடும் விமர்சனம் எழுந்த நிலையில் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கி கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.