அனைத்து வங்கிகளிலும் செயலிழந்த கணக்குகளை மீண்டும் செயல்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. ரிசர்வ் வங்கி டிசம்பர் 2 ஆம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சில கணக்கு வைத்திருப்பவர்களின் KYC முடிக்கப்படாததால் மற்றும் சில அடிப்படை குறைபாடுகள் காரணமாக மூடப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் கூடிய விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும், முடக்கப்பட்ட அல்லது செயலிழந்த கணக்குகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அவற்றை செயல்படுத்தும் செயல்முறையை சீரமைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆன்லைன் மற்றும் மொபைல் பேங்கிங் உள்ளிட்ட செயல்முறைகள் மூலம் KYC அப்டேட்கள் எளிதாக்கப்பட்டுள்ளது. செயலிழக்கச் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
உங்கள் கணக்கு HDFC வங்கி, IDFDC First Bank, SBI அல்லது PNB இருந்து, அது செயலிழந்திருந்தால், அதை இந்த வழியில் செயல்படுத்தலாம்.
HDFC:
ஸ்டெப் 1: கணக்கைச் செயல்படுத்த வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். அங்கு நீங்கள் ஒரு எழுத்துப்பூர்வ விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும், அதில் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.
ஸ்டெப் 2: இதனுடன், அடையாளம் மற்றும் முகவரிக்கான செல்ஃப் அட்டெஸ்டேட் வழங்க வேண்டும்.
ஸ்டெப் 3: இதற்குப் பிறகு, உங்கள் கணக்கில் ஏதேனும் பரிவர்த்தனை செய்தவுடன், அது மீண்டும் செயல்படுத்தப்படும்.
PNB:
ஸ்டெப் 1: கணக்கைச் செயல்படுத்த வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். அங்கு உங்கள் கணக்கை செயல்படுத்த ஒரு ரெக்வஸ்ட் லெட்டரை கொடுக்க வேண்டும். இது தவிர, நீங்கள் KYC ஆவணங்களையும் வழங்க வேண்டும்.
ஸ்டெப் 2: UIDAI இன் பயோமெட்ரிக் e-KYC மூலம் ஆதென்டிகேஷனுக்காக உங்கள் ஆதார் எண்ணை வழங்க வேண்டும்.
ஸ்டெப் 3: கணக்கை செயல்படுத்தும் போது வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.100 கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும். KYC க்காக வாடிக்கையாளரிடமிருந்து ஆதார் கார்டு தகவல்களும் எடுக்கப்படும்.
SBI:
ஸ்டெப் 1: வாடிக்கையாளர் தனது சமீபத்திய KYC ஆவணங்களுடன் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2: கணக்கை செயல்படுத்த ஒரு ரெக்வஸ்ட் லெட்டரை கொடுக்க வேண்டும்.
ஸ்டெப் 3: வங்கி கிளை ஆனது வாடிக்கையாளர் வழங்கிய KYC ஆவணங்களை சரிபார்த்த பிறகு உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும்.
ஸ்டெப் 4: கணக்கை செயல்படுத்துவது பற்றிய தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் மூலம் வங்கி அனுப்பப்படும்.
வங்கி ஆனது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பெற்ற பிறகு 3 வேலை நாட்களுக்குள் செயல்படுத்தப்படும்.
December 24, 2024 10:10 PM IST