Last Updated:

இந்த படத்தில் அவர் ஏறக்குறைய சில்க் ஸ்மிதாவின் கேரக்டரில் நடித்திருந்தார். படத்தில் அவர் செயின் ஸ்மோக்கர் என்பதால் அதற்காக எடை அதிகம் இருப்பது தேவையாக இருந்தது. இதற்காக அவர் 12 கிலோ எடை வரை அதிகரித்தார்.

News18

செயின் ஸ்மோக்கர் கேரக்டருக்காக பிரபல நடிகை ஒருவர் 12 கிலோ எடை அதிகரித்திருந்தார். அவர் நடித்த அந்த திரைப்படம் வசூலை அள்ளிக்குவித்த பல கோடி ரூபாய் லாபத்தை பெற்றது.

முன்னணி நடிகையான வித்யாபாலன் ஏறக்குறைய சினிமா துறையை விட்டு விலகி விட்டதாகவே கருதப்படுகிறார். அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் மிகுந்த வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருப்பார். தமிழில் அவர் கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் அவரது கேரக்டர் குறைவான நேரமே இடம்பெற்றாலும், ரசிகர்களின் கவனத்தை பெற்றார் வித்யா பாலன். இந்தி சினிமாவில் சோதனை முயற்சியாக வித்யா பாலன் பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு வெளிவந்த தி டர்ட்டி பிக்சர் என்ற படம் அவரது சினிமா கெரியரை மாற்றியது. இந்த படத்தில் அவர் ஏறக்குறைய சில்க் ஸ்மிதாவின் கேரக்டரில் நடித்திருந்தார். படத்தில் அவர் செயின் ஸ்மோக்கர் என்பதால் அதற்காக எடை அதிகம் இருப்பது தேவையாக இருந்தது. இதற்காக அவர் 12 கிலோ எடை வரை அதிகரித்தார்.

மேலும் இதற்காக 2 மணி நேரத்தில் 15 சிகரெட்டுகள் வரை பிடித்திருக்கிறார் வித்யா பாலன். இதுகுறித்து பின்னாளில் கருத்து தெரிவித்த அவர், சிகரெட் பிடிப்பதால் கேடு ஏற்படாமல் இருக்கும் என்றால் நான் செயின் ஸ்மோக்கராக இருந்திருப்பேன் என்று கிண்டலாக கூறியிருந்தார்.

டர்ட்டி பிக்சர் படத்திற்கு பின்னரும் நாள் ஒன்றுக்கு 3 சிகரெட்டுகள் வரை பிடிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தாராம். இந்த படத்தில் நடிப்பதற்காக முதலில் கங்கனா ரனாவத் மற்றும் பிபாசா பாசுவை படக்குழுவினர் அணுகியிருந்தனர். அவர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், இந்த படம் வித்யா பாலன் பக்கம் சென்றது.

இதையும் படிங்க – Mammootty | மம்மூட்டி – கௌதம் வாசுதேவ் மேனன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரூ. 18 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ. 117 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் வித்யா பாலனுடன் இம்ரான் ஹாஷ்மி, நஸ்ருதீன் ஷா, துஷார் கபூர் உள்ளிட்டோர் நடித்தனர்.



Source link