Last Updated:
வணங்கான் படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக பாலாவும், சூர்யாவும் பரஸ்பரம் இந்த படத்தை கைவிட்டனர். சூர்யாவுக்கு பதிலாக அதே கதையில் அருண் விஜய் நடித்துள்ளார்.
நடிகர் விஜய் குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ள இயக்குனர் பாலா தனது குழந்தையுடன் விஜய் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்கு அனுமதி கேட்டதாகவும் அந்த அளவுக்கு அவர் ஒழுக்கமான நபர் என்றும் கூறியுள்ளார். அவரது கருத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக இருந்து வரும் பாலா தேசிய விருதை பெற்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்களில் இடம் பெறும் காட்சிகள் சில நேரம் கடுமையாக விமர்சிக்கப்படும். தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தை பொங்கலையொட்டி திரைக்கு கொண்டுவர பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக பாலாவும், சூர்யாவும் பரஸ்பரம் இந்த படத்தை கைவிட்டனர். சூர்யாவுக்கு பதிலாக அதே கதையில் அருண் விஜய் நடித்துள்ளார்.
தற்போது இந்த படத்துடைய புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி இயக்குனர் பாலா தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது-
ஒருமுறை நான் என் குழந்தையுடன் இருந்தபோது ஒரு நிகழ்ச்சியில் விஜய்யை சந்திக்க நேரிட்டது. அப்போது என் குழந்தை அவருடன் விளையாடிக் கொண்டிருந்தது. எனது குழந்தையுடன் செல்பி எடுத்துக் கொள்வதற்காக விஜய் கேமராவை ஆன் செய்து விட்டார்.
இதையும் படிங்க – Sawadeeka… அனிருத்தின் ‘செலிபிரேஷன்’.. ‘விடாமுயற்சி’ பட முதல் பாடல் வெளியானது!
அந்த நேரத்தில் என்னிடம் எனது குழந்தையுடன் செல்பி எடுத்துக் கொள்ளட்டுமா? என்று அனுமதி கேட்டார் அந்த அளவுக்கு அவர் மிக ஒழுக்கமான நபர் என்று கூறினார். விஜய் குறித்து பாலா தெரிவித்த கருத்துக்கள் தற்போது சினிமா அரசியல் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
December 29, 2024 3:33 PM IST