இன்று ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களுக்கு மூன்றாவது கை போல ஆகிவிட்டது. பலர் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு இணைவதற்கு மட்டுமல்லாமல் பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர்.
சோஷியல் மீடியா பிளாட்பார்ம் பயன்படுத்த, போட்டோக்கள் எடுப்பது போன்ற பல்வேறு ஸ்மார்ட் போன் பயன்பாட்டை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் இவை அனைத்தையும் செய்யும் பொழுது ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படுகிறது. ‘Storage full’ என்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருக்க வேண்டும். எனவே உங்களுடைய போனில் உள்ள ஸ்டோரேஜ் ஸ்பேஸை காலி செய்வதற்கு நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்களை இப்பொழுது பார்க்கலாம்.
தேவை இல்லாத அப்ளிகேஷன்களை டெலிட் செய்யவும்:
உங்களுடைய போனில் பயன்படுத்தப்படாத அல்லது எப்போதாவது பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை அன்-இன்ஸ்டால் செய்யுங்கள். இதற்கு உங்களுடைய செட்டிங்ஸ் ஆப்ஷனில் உள்ள அப்ளிகேஷன் லிஸ்ட் -க்கு சென்று உங்களுக்கு தேவை இல்லாத அப்ளிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கும்.
கேட்ச்டு டேட்டாவை கிளியர் செய்யவும்:
நாள் ஆக ஆக உங்களுடைய அப்ளிகேஷன்கள் கேட்ச்ட் டேட்டாவை சேகரித்து அதனால் உங்கள் போனில் குறிப்பிடத்தக்க அளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படும். இந்த டெம்பரரி பைல்கள் அப்ளிகேஷனின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை வீண் ஸ்டோரேஜை எடுத்துக் கொள்ளக்கூடும். எனவே உங்களுடைய போன் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்று ஸ்டோரேஜ் அல்லது ஸ்டோரேஜ் மேனேஜ்மெண்ட் பிரிவில் உள்ள செக்ஷனில் உள்ள ‘Clear cached data’ என்பதை கிளிக் செய்யவும்.
போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை கிளவுடுக்கு நகர்த்தவும்:
மீடியா ஃபைல்ஸ் குறிப்பாக போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அதிலும் அதிக அளவு டிவைஸ் ஸ்டோரேஜை எடுத்துக் கொள்ளக்கூடிய ஃபைல்களை கிளவுடுக்கு நகர்த்துங்கள். அவற்றை உங்கள் போனில் வைப்பதற்கு பதிலாக கூகுள் போட்டோஸ் அல்லது icloud-க்கு நகர்த்தவும். கூகுள் போட்டோஸ் அல்லது
icloud-க்கு போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அப்லோடு செய்த பிறகு உங்களுடைய சாதனத்தில் இருந்து அவற்றை நீங்கள் பாதுகாப்பாக டெலிட் செய்யலாம். இவ்வாறு செய்வது உங்களுடைய நினைவுகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்வதோடு உங்கள் ஸ்மார்ட்போனில் கூடுதல் ஸ்டோரேஜும் கிடைக்கும்.
டவுன்லோட் மற்றும் ஃபைல்களை சரியான முறையில் பராமரிக்கவும் உங்களுடைய டவுன்லோட் ஃபோல்டர் மற்றும் ஃபைல் மேனேஜரை அவ்வப்போது கண்காணித்து அதில் உள்ள தேவையற்ற ஃபைல்களை டெலிட் செய்யுங்கள். டாக்குமெண்ட்கள், pdf, மற்றும் மிசலேனியஸ் டவுன்லோட் போன்றவை இதில் அடங்கும். ஆனால் இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் சாதனத்தின் கிரிட்டிக்கல் சிஸ்டம் பைல்கள் டெலிட் ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
அப்ளிகேஷன் செட்டிங்ஸை மேம்படுத்தவும்:
ஒரு சில அப்ளிகேஷன் உங்களுடைய சாதனத்தில் குறிப்பிட்ட அளவு டேட்டாவை கட்டுப்படுத்துவதற்கான செட்டிங்ஸை வழங்குகிறது. அவ்வாறு இருக்கக்கூடிய அப்ளிகேஷன்களின் செட்டிங்ஸ் ஆப்ஷனுக்கு சென்று அதில் ஆஃப்லைன் கன்டென்ட், டவுன்லோட் குவாலிட்டி அல்லது கேட்ச்ட் சைஸ் போன்றவற்றை சரிபார்க்கவும். இவற்றை மாற்றியமைப்பதன் மூலமாக உங்கள் போனில் இந்த அப்ளிகேஷன்கள் குறைவான அளவு ஸ்டோரேஜ் பயன்படுத்தப்படுவதை நீங்கள் உறுதி செய்யலாம்.
.