முன்னாள் அமைச்சர் வேதாந்தி சேகு இஸ்ஸதீனுடைய மரணச் செய்தி கேட்டு நான் மிகவும் ஆழ்ந்த கவலையடைகிறேன். குறிப்பாக
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப கால தவிசாளராக இருந்து செயற்பட்டு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய வளர்ச்சியில் அதிகம் பங்களிப்புச் செய்த ஒருவர்.
முதலாவது கிழக்கு பிரதேச சபைத் தேர்தல், கிழக்கு மாகாண சபைத் தேர்தல், 1989ஆம் ஆண்டு முதலாவது பாராளுமன்ற தேர்தல் போன்ற ஆரம்ப கால கட்டங்களில் கட்சியின் வளர்ச்சிக்காக முழுப்பங்களிப்பையும் அளப்பரிய தியாகத்தையும் செய்து கிழக்கு மாகாணத்தில் கட்சியை உருவாக்குவதில் மறைந்த மாபெரும் தலைவர் அஷ்ரபுடன் வலது கரமாக நின்று செயற்பட்ட ஒருவர்.
அவர் பிரதி தவிசாளராக இருந்த காலங்களில் அவரோடு இணைந்து கட்சியை வளர்த்தெடுப்பதில் பங்களித்தவன் என்ற வகையில் அவர்களுடைய பணிகளையும், தியாகங்களையுன் என்றுமே மறக்க முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சட்சியின் வளர்ச்சியில் அன்னாருடைய பங்களிப்பு அளப்பெரியது அதை யாரும் மறுக்க முடியாது.
அதே போன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக இருந்து பல்வேறுபட்ட பணிகளை இந்த நாட்டுக்கும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் செய்த ஒருவர்.
அவருடைய மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய இழப்பாகும். அன்னாருடைய இழப்பால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு, எல்லாம் வல்ல இறைவன் அன்னாருடைய பாவங்களை மன்னித்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
The post சேகு இஸ்ஸதீனின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு ஈடுசெய்ய முடியாதது appeared first on Thinakaran.