Last Updated:

Public Provident Fund | நீண்ட கால நிலைத்தன்மை, நெகிழ்வுத் தன்மை மற்றும் அட்டகாசமான வரி பலன்களைக் கொண்ட இந்த பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்பது நம்முடைய பொருளாதார எதிர்காலத்தை சிறப்பான முறையில் திட்டமிடுவதற்கு உதவுகிறது.

News18

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் (PPF) என்பது இந்தியாவில் உள்ள மிகவும் நம்பகமான ஒரு முதலீட்டு ஆப்ஷனாக அமைகிறது. அரசு ஆதரவு மற்றும் வரி சார்ந்த பலன்களை தருவதால் பலர் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்வதை விரும்புகின்றனர். நீண்ட கால நிலைத்தன்மை, நெகிழ்வுத் தன்மை மற்றும் அட்டகாசமான வரி பலன்களைக் கொண்ட இந்த பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்பது நம்முடைய பொருளாதார எதிர்காலத்தை சிறப்பான முறையில் திட்டமிடுவதற்கு உதவுகிறது.

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டின் முக்கியமான அம்சங்கள் மற்றும் நன்மைகள்

நம்பகமான சேமிப்புத் திட்டத்தை எதிர்பார்க்கும் நபர்களுக்கு பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்பது நம்ப முடியாத பல நன்மைகளை அளிக்கிறது. இதில் நீங்கள் ஓராண்டுக்கு குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். 15 வருட லாக்-இன் பீரியட் கொண்ட இந்தத் திட்டம் உங்களுடைய வழக்கத்தில் சேமிப்பை ஒரு அங்கமாக இருக்க செய்வதன் மூலம், உங்களுடைய பொருளாதார எதிர்காலத்தை உறுதி செய்கிறது.

மேலும், இந்த திட்டம் மெச்சூரிட்டியாகும்போது, அதனை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்துக் கொள்வதற்கான அனுமதியும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சேமிப்புத் திட்டத்தின் முதலீட்டுத் தொகை, இதன் மூலமாக பெறும் வட்டி மற்றும் மெச்சூரிட்டி வித்டிராயல்கள் ஆகிய எந்த ஒரு பணத்திற்கும் நீங்கள் வரி செலுத்த தேவையில்லை. இதனால் பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் என்பது வரிப் பலன்களை எதிர்பார்க்கும் நபர்களுக்கு பெஸ்ட்டான சாய்ஸாக அமைகிறது.

தற்போதைய வட்டி விகிதங்கள் மற்றும் வித்டிராயல் விதிகள்

ஜனவரி 2025 நிலவரப்படி பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்ட் திட்டத்திற்கான வட்டி விகிதம் என்பது ஓராண்டுக்கு 7.1%. இது கூட்டு வட்டி முறையில் கணக்கிடப்பட்டு மெச்சூரிட்டி தொகை வழங்கப்படும். இந்த வட்டி விகிதமானது 3 மாதங்களுக்கு ஒருமுறை அரசு மூலமாக மாற்றம் செய்யப்படும். இன்றைய மார்க்கெட் டிரெண்டுக்கு தகுந்தார் போல், சிறந்த வட்டி விகிதங்கள் பெறுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது.

இதையும் படிக்க: எஸ்பிஐ வங்கியின் 444 நாட்கள் FD vs பேங்க் ஆஃப் பரோடாவின் 400 நாட்கள் FD… ஒப்பீடு இதோ…!

ஒரு சில நிபந்தனைகளின் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வித்டிராயல்கள் செய்ய அனுமதிக்கப்படுகிறது. மெச்சூரிட்டியின்போது, முதலீடாளர்கள் மொத்தத் தொகையையும் வித்டிரா செய்து கொள்ளலாம் அல்லது குறிப்பிட்ட அளவு தொகையை பேலன்ஸாக வைத்து, அதன் மூலமாக வட்டியை சம்பாதிக்கலாம். மேலும், கூடுதலாக 5 ஆண்டுகளுக்கு இந்த அக்கவுண்டை நீட்டித்துக் கொள்வதற்கான முடிவையும் எடுக்கலாம். அப்போது கூடுதல் டெபாசிட்களை செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது முதலீட்டாளர்களின் முடிவு.

இதையும் படிக்க: விவசாயிகளுக்கு வரப்போகிறது பொங்கல் பரிசு… மத்திய அரசு விரைவில் அறிவிப்பு…

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டில் முதலீடு செய்தல்: எதிர்காலத்திற்கான ஒரு ஸ்மார்ட் மூவ்

பப்ளிக் பிராவிடண்ட் ஃபண்டு அக்கவுண்ட்டை திறப்பது என்பது மிகவும் எளிமையான ஒரு விஷயம். இதனை தபால் நிலையங்கள் அங்கீகரிக்கப்பட்ட வங்கி கிளைகள் அல்லது ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள் மூலமாக செய்யலாம். ஒவ்வொரு ஆண்டும் வழக்கமான முறையில் உங்களுடைய பங்களிப்புகளை செலுத்தி பெறக்கூடிய வட்டியை அதிகப்படுத்தலாம். உதாரணமாக, ஓராண்டுக்கு நீங்கள் 1.5 லட்சம் முதலீடு செய்தால் 7.1 சதவீத வட்டிக்கு 15 வருடங்களுக்கு மொத்தமாக 40.68 லட்ச ரூபாயை மெச்சூரிட்டி தொகையாக உங்களால் பெற முடியும். இதில் நீங்கள் சம்பாதித்த வட்டி மட்டுமே 18.18 லட்சம் ரூபாய் ஆகும்.

தமிழ் செய்திகள்/வணிகம்/

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட்: சேமிக்கவும் செய்யலாம்… டேக்ஸ் ஃபெனிபிட்டும் கிடைச்ச மாதிரி ஆச்சு…!



Source link