Last Updated:
மும்பை இல்லத்தில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
மும்பை இல்லத்தில் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு கொள்ளையன் தப்பிச் சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் போது சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூர் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.
மும்பையின் பாந்த்ரா பகுதியில் இருக்கிறது பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீடு. இந்த வீட்டுக்குள் நள்ளிரவு சுமார் 2.30 மணி அளவில் திருடன் ஒருவன் புகுந்து திருட முயற்சித்ததாகவும், அப்போது வீட்டில் வேலை பார்க்கும் பணியாளர் அவரை பிடிக்க முயன்றபோது, அவர் மீது கொள்ளையன் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதையும் வாசிக்க: Saif Ali Khan | 6 இடங்களில் கத்திக்குத்து..2 ஆழமான காயங்கள்…சைஃப் அலி கான் உடல்நிலை எப்படி?
இதனை தடுக்க வந்த சைஃப் அலிகானை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கிவிட்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சைஃப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. 6 முறை அவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகவும், அதில் 2 காயங்கள் ஆழமாக இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவத்தின் போது சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூர் வீட்டில் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றிரவு கரீனா கபூர் தனது சகோதரி கரீஷ்மா கபூர் மற்றும் நண்பர்கள் ரிஹா மற்றும் சோனம் கபூர் ஆகியோருடன் ‘கேர்ள்ஸ் நைட்’ பார்ட்டியில் இருந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 2 மணி அளவில் கரீஷ்மா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 4 கண்ணாடி கிளாஸ்கள் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் கரீனா கபூர் வீட்டில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.
January 16, 2025 12:55 PM IST