நடிகர் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா துலிபாலாவின் நிகர மதிப்பு பற்றி இங்கே பார்க்கலாம்.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகரான நாகர்ஜூனாவின் மூத்த மகனும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இதையடுத்து நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணம் நேற்று குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்று முடிந்தது. இதில் தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியதாக தெரிகிறது. இந்நிலையில், திருமண புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், நடிகர் நாக சைதன்யாவின் மனைவி சோபிதாவின் ஆடம்பரமான வாழ்க்கை முறை பற்றி இங்கே பார்ப்போம்.
சோபிதா துலிபாலா
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டில் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். இருவரும் பிரிந்ததற்கான காரணங்கள் தற்போது வரை வெளியிடப்படவில்லை. இந்நிலையில், நவம்பர் 2022ல், லண்டனில் நாக சைதன்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது. ஏனென்றால் அந்த புகைப்படத்தின் பின்னணியில் அமர்ந்திருந்த பெண் சோபிதா துலிபாலா என ரசிகர்கள் கணித்தனர். இதைத் தொடர்ந்து நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பல வதந்திகள் பரவ ஆரம்பித்தன.
சோபிதா துலிபாலா ஆந்திராவின் தெனாலியில் பிறந்தார். தற்போது விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவரது தந்தை பெயர் வேணுகோபால் ராவ், தாயார் சாந்தா ராவ் ஆவர். சோபிதாவுக்கு சமந்தா என்ற தங்கையும் உண்டு. 2013ல், அவர் ஃபெமினா மிஸ் இந்தியா எர்த் பட்டத்தை வென்றார். அதே ஆண்டு மிஸ் இந்தியா போட்டியில் இரண்டாவது இடத்தையும் சோபிதா பெற்றார்.
சோபிதா துலிபாலவின் நிகர மதிப்பு
சோபிதா துலிபாலா பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சோபிதாவின் சொத்து மதிப்பு ரூ.7 கோடி முதல் ரூ.10 கோடி வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, சோபிதா மும்பையில் அமைந்துள்ள ஒரு ஆடம்பரமான வீட்டில் வசிக்கிறார். இந்த வீடு அதன் நேர்த்தியான உட்புறம் மற்றும் கலை அழகிற்காக அறியப்படுகிறது.
சோபிதா துலிபாலாவின் வருமானம்
திரைப்படங்கள், இணையத் தொடர்கள் உள்ளிட்டவைகள் மூலம் சோபிதா தனது செல்வத்தை ஈட்டியுள்ளார். திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் விளம்பரங்களில் அவர் பணியாற்றுவதற்காக ரூ.70 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வசூலிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read:
Pushpa 2: The Rule Review | எப்படி இருக்கிறது அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’? விமர்சனம் இதோ..!
சோபிதாவின் சொகுசு கார் சேகரிப்பு
நாக சைதன்யாவின் தந்தை நாகார்ஜுனா, திருமண பரிசாக ரூ.2.5 கோடி மதிப்பிலான நேர்த்தியான மெரூன் நிற லெக்ஸஸ் எல்எம் எம்பிவி காரை பரிசாக அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலிவுட் மற்றும் தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் பிரபலமாக சோபிதா மாறியுள்ளார். மேலும் வெற்றிகரமான வாழ்க்கை மூலம், சோபிதா தனது செல்வத்தை தொடர்ந்து ஈட்டி வருகிறார்.
.