எந்தவித பின்புலமோ பண வசதியோ இன்றி தொழில் முனைவோர் ஆவது அவ்வளவு எளிதல்ல. தொழில் தொடங்க வேண்டும் என்ற கனவுகள் ஆசைகள் இருந்தாலும், இந்தியாவில் பலரது நிலைமை மேற்சொன்ன நிலையில் தான் உள்ளது. ஆனால் ஒருசிலருக்கு இந்த வாய்ப்பு மிக எளிதாகவே கிடைத்து விடுகிறது. பரம்பரை பரம்பரையாக தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்து, வெளிநாடுகளில் படிப்பை மேற்கொண்டு சிலர் இந்த வாய்ப்பை எளிதில் அடைந்துவிடுகிறார்கள். ஆனால் இந்த வாய்ப்புகள் எளிதாக கிடைத்தாலும், அவர்கள் தங்கள் திறமையாலும் அர்ப்பணிப்பாலும் தங்களது நிறுவனத்தை வளர்த்தெடுக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் அமித் பாட்டியா.

விளம்பரம்

அமித் பாட்டியா ஒரு பிரிட்டிஷ்-இந்திய தொழிலதிபர். அதுமட்டுமின்றி இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபரான லட்சுமி மிட்டலின் மருமகனும் ஆவார். ஸ்வார்டு ஃபிஷ் என்று முன்பு அழைக்கப்பட்ட அய்பே கேபிட்டலின் (Aybe Capital) நிறுவனர் மற்றும் மேலாண்மை இயக்குனராக செயல்பட்டு வருகிறார் அமித். 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல-சொத்துகளை நிர்வகித்து வரும் நிரந்தர மூலதனமாக செயல்பட்டு வருகிறது.

அமித் 20 ஆண்டுகளுக்கும் மேலான கார்ப்பரேட் நிதி மற்றும் தனியார் பங்கு முதலீட்டு அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவர் வனிஷா மிட்டல் பாட்டியாவை மணந்துள்ளார். இருவருக்கும் 2004-ம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அமித்தின் மாமனார் லக்ஷ்மி மிட்டலின் தற்போதைய சொத்து மதிப்பு 16.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என ஃபோப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

விளம்பரம்
முதுகு வலியை குணப்படுத்த பயனுள்ள 8 வீட்டு வைத்தியங்கள்.!


முதுகு வலியை குணப்படுத்த பயனுள்ள 8 வீட்டு வைத்தியங்கள்.!

அமித் நியூயார்க்கில் உள்ள மெரில் லிஞ்ச் (Merrill Lynch) மற்றும் மோர்கன் ஸ்டான்லியில் (Morgan Stanley) தனது கேரியரைத் தொடங்கினார். தற்போது 45 வயதாகும் அமித், குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் (Queens Park Rangers FC) என்ற கால்பந்து அணியின் இணை உரிமையாளரும் ஆவார். இது மேற்கு லண்டனில் உள்ள ஷெப்பர்ட்ஸ் புஷ்ஷில் உள்ள தொழில்முறை சங்க கால்பந்து கிளப் ஆகும்.

அதுமட்டுமின்றி ரியல் எஸ்டேட் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பிற வணிக ஆர்வங்களிலும் இவர் செயல்பட்டு வருகிறார். மேலும் நிலம் மற்றும் சொத்து நிதியான சம்மிக்ஸ் கேபிட்டலில் (Summix Capital) நிறுவன பங்குதாரராகவும் அமித் இருந்து வருகிறார். ஆகஸ்ட் 2016-ல் ப்ரீடன் குழுமத்தால் கையகப்படுத்தப்படுவதற்கு முன்பு வரை, ஹோப் கன்ஸ்ட்ரக்ஷன் மெட்டீரியல்ஸின் நிர்வாகத் தலைவராக அமித் இருந்தார். மேலும் இவர் பிரீடன் குழுமத்தின் நிர்வாகத்தில் அல்லாத தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

விளம்பரம்

லண்டனில் பிறந்த பாட்டியா 1995 வரை டெல்லியில் கொலம்பாஸ் பள்ளியில் படித்தார். பின்னர் லண்டனில் உள்ள டல்விச் கல்லூரியிலும், 1997-ல் டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியிலும் அமித் படித்தார். மேற்படிப்பிற்காக கார்னெல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அமித் பாட்டியா, அங்கு பொருளாதாரம் பயின்றார்.

.



Source link