சோனி நிறுவனம் சமீபத்திய தனது வயர்லெஸ் இயர்பட்களான WF-C510 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்கள் வசதியாக பொருந்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் சக்தி வாய்ந்த பேட்டரியால் நீண்ட நேரம் உபயோகிக்க வசதியானதாக இருக்கிறது. மேலும், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் நத்திங் போன்று இதுவும் பட்ஜெட்டில் இருக்கும். கச்சிதமான வடிவமைப்பில், நான்கு வண்ணங்களில் கிடைக்கும் இந்த இயர்பட்களை சோனி நிறுவனம் மிகக் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சோனி WF-C510 TWS இயர்பட்ஸ் விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள்:
WF-C510 இயர்பட்ஸ் ஆனது இந்தியாவில் செப்டம்பர் 26, 2024 முதல் சோனி ரீடெய்ல் ஸ்டோர்கள், முக்கிய எலக்ட்ரானிக்ஸ் கடைகள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கும். சோனியின் புதிய TWS இயர்பட்களின் விலை இந்தியாவில் ரூ.4,990 ஆகும். தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுடன் இந்த பட்களை வாங்கினால், ரூ. 1,000 நேரடி தள்ளுபடியைப் பெறலாம். அதாவது தள்ளுபடிக்குப் பிறகு, இந்த பட்கள் ரூ.3,990 விலையில் மட்டுமே கிடைக்கும்.
சோனி WF-C510 TWS இயர்பட்ஸ் விவரக் குறிப்புகள்:
WF-C510 என்பது சோனியின் மிகச்சிறிய மூடிய வகை இயர்பட்கள் ஆகும். WF-C510 இயர்பட்கள் காதுகளில் பாதுகாப்பான மற்றும் வசதியான பொருத்தத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த இயர்பட்கள் ஆனது சிறிய, லைட் வெயிட் மற்றும் வசதியான பொருத்தம் போன்ற வடிவமைப்பில் வருகின்றன. சோனி WF-C510 இயர்பட்கள் ஆனது நீலம், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை உள்ளிட்ட நான்கு வண்ண வண்ணங்களில் வருகிறது.
பேட்டரியைப் பற்றி பேசுகையில், சோனி WF-C510 இயர்பட்கள் 22 மணிநேர மொத்த பேட்டரி ஆயுள் ஆதரவுடன் வருகின்றன. இதில் சார்ஜிங் கேஸ் இல்லாமல் 11 மணிநேரம் வரை பேட்டரி ஆயுளையும், கேஸுடன் கூடுதலாக 11 மணிநேர பேட்டரி ஆயுளையும் வழங்குகிறது. மேலும் இது 5 நிமிடத்தில் விரைவாக சார்ஜ் ஆகும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் நாள் முழுவதும் இசையை ரசிக்கலாம். இயர்பட்களை ஒரே நேரத்தில் இரண்டு புளூடூத் சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கும் மல்டிபாயிண்ட் இணைப்புகள் கொண்டுள்ளன. இதில் நீர் மற்றும் தூசிக்கு எதிரான பாதுகாப்பிற்காக IPX4 மதிப்பீட்டுடன் வருகிறது.
WF-C510 இல் டிஜிட்டல் சவுண்ட் என்ஹான்ஸ்மென்ட் என்ஜின் (DSEE) உள்ளது, எனவே இது உயர்தர ஆடியோவை வழங்குகிறது. மேலும், 6mm டிரைவர் யூனிட் மற்றும் கட்டிங் எட்ஜ் டெக்னாலஜி கொண்ட புளூடூத் v5.3 ஆகியவற்றை வழங்குகிறது.
.