தமிழ் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இன்று தமிழ் திரை உலகில் உச்ச காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, கடவுள் வழிபாட்டில் அதிக நாட்டம் கொண்டுள்ளார். எந்த ஊருக்கு படப்பிடிப்பிற்கு சென்றாலும் அங்கு உள்ள சில கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக்கி வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் இரா. சரவணன் இயக்கத்தில் யோகி பாபுவை மையமாகக் வைத்து கதையின் படப்பிடிப்பு தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
அதேசமயம் கிடைக்கும் நேரத்தில் தஞ்சையில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்து வருகிறார். அதன்படி கடந்த மாதம் தஞ்சாவூர் பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வழிபாட்டில் கலந்து கொண்ட நிலையில், தஞ்சையை அடுத்த வல்லத்தில் உள்ள ஏகௌரி அம்மன் கோவிலில் நடிகர் யோகி பாபு, துரை சுதாகர், திரைப்பட இயக்குனர் சரவணன் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
ஏகௌரி அம்மன்:
தஞ்சாவூர் என்ற நகரம் தோன்றுவதற்கு முன்பு வல்லம் தான் சோழர்களின் தலைநகராக இருந்தது. அக்காலக்கட்டத்தில் முற்காலச் சோழர்களால் எடுக்கப்பட்ட கோயில்தான் வல்லம் ஏகௌரியம்மன் கோயில்.
சோழர்கள் வழிபடும் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் அவர்களுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய வல்லத்து காளியாகவும் விளங்கியவள்தான் இந்த ஏகௌரி அம்மன். முக்கியமாக ஏவல், பில்லி, சூனியம் ஆகியவற்றை நீக்கி வேண்டியோருக்கு வேண்டும் வரங்களை அளித்து வாழ்வில் வெற்றி பெற உதவிக்கரம் நீட்டுவாள் ஏகௌவரி அம்மன் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இன்றளவும் இருந்து வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.