கிழக்கு ஆசிய உச்சிமாநாடு லாவோஸ் நாட்டில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சிறப்பித்தார். அப்போது பல்வேறு உலக நாட்டுத் தலைவர்களுக்கு, பிரதமர் மோடி விதவிதமான கலைநயமிக்க பரிசுப் பொருட்களை வழங்கினார்.

அந்தவகையில் லாவோஸ் அதிபர் தாங்லான் சிசோலித்திற்கு தமிழ்நாட்டில் உருவான பழங்கால புத்தர் சிலையை பரிசளித்தார். வெண்கலம் மற்றும் பித்தளையைக் கொண்டு, சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த சிலை, நுட்பமான வேலைப்பாடுகளால் ஆனது.

ஞானம், கருணை ஆகிய இரண்டு பண்புகளையும் ஆழமான ஆன்மீக நெறியில் பறைசாற்றும் விதமாக இந்த புத்தர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையில் வண்ணத்திற்காக எனாமெல் பூசப்பட்டிருப்பதும் இதன் கலைநயத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

விளம்பரம்

News18

புத்தரின் ஒரு கை ஆசீர்வதிப்பது போலவும், மற்றொரு கை ஆழமான தியானத்தில் இருப்பது போலவும் இச்சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது தமிழர்களின் கலைநயம் மற்றும் ஆன்மிக நெறியை ஒருசேர பறைசாற்றியுள்ளது.

இதுமட்டுமின்றி குஜராத்தில் தயாரிக்கப்பட்ட படான் படோலா பட்டுப்புடவையும், லாவோஸ் அதிபர் சிசோலித்தின் மனைவி நாலி சிசோலித்திற்கு, பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

.



Source link