Last Updated:

பிப்ரவரி 19 ஆம் தேதியில் இருந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடவுள்ளது. 20 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணி

ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தியா விளையாடவுள்ள போட்டிகளின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 5 ஆவது போட்டி நாளை மறுதினம் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குகிறது.

இங்கிலாந்து அணியுடன்…

ஆஸ்திரேலிய தொடரை முடித்துக் கொண்டு இந்தியா அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்காக இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. முதல் போட்டி ஜனவரி 22 ஆம் தேதி தொடங்குகிறது. அடுத்தடுத்த 4 போட்டிகள் ஜனவரி 25, ஜனவரி 28, ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன

20 ஓவர் தொடரை முடித்துக் கொண்ட பின்னர் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. பிப்ரவரி 6, 9 மற்றும் 12 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை

இதன்பின்னர் பிப்ரவரி 19 ஆம் தேதியில் இருந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடவுள்ளது. 20 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இந்திய அணி வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க – இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்… ரோஹித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து மூத்த வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



Source link