இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்.

இச்சந்திப்பில், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் H.E. Carmen Moreno, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் பிரதி பிரதானி லார்ஸ் பிரெடல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான கண்காணிப்பாளராக செயற்படும் Nacho Sanchez உள்ளிட்ட தரப்பினர் கலந்து கொண்டனர்.

இரு தரப்புக்கும் இடையே சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இங்கு, 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களால் நடத்தப்பட்ட தேர்தல் கண்காணிப்பு அறிக்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கையளிக்கப்பட்டது.

The post ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு அறிக்கை எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிப்பு appeared first on Daily Ceylon.



Source link