ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் சீனாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு சீன அரசாங்கத்தினால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த அழைப்பை இலங்கையிலுள்ள சீன தூதுவராலயம் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
The post ஜனாதிபதி அநுர அடுத்த மாதம் இந்தியா விஜயம் appeared first on Thinakaran.