ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்திற்கு மாற்றுவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

இதுவரை கொழும்பு 10, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டிடத்தின் 3வது மாடியில் பராமரிக்கப்பட்டு வந்த ஜனாதிபதி நிதிய அலுவலகம் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்படவுள்ளது.

இதன்படி, ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்பட உள்ளது.

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பெற்றுக்கொள்ள வரும் பொதுமக்கள் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டிடத்தின் தரைத்தளத்தில் உள்ள அலுவலக வளாகத்திற்கு வர முடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link