Last Updated:

japan earthquake: ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News18

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு உலகில் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உதாரணமாக இந்தோனேசியா மலுகு பிராந்தியத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இந்தோனேசியாவை உலக்கியது. அதேபோல், துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கும் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் தென்கிழக்கு துருக்கி மற்றும் சிரியாவில், கடந்த வாரம் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இன்று ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இது, மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்மேற்கு ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் உள்ளூர் நேரப்படி 9:19 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கும் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ் செய்திகள்/உலகம்/

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம்!





Source link