இருவருக்கு இடையே நம்பிக்கையும், பகிரப்பட்ட பொறுப்புகளும் இருக்கும் இடத்தில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பது பல வழிகளில் நன்மை தரக்கூடியதாக அமைகிறது. ஒரே வீட்டில் இருக்கும் பலரின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக ஜாயிண்ட் அக்கவுண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக குடும்ப உறுப்பினர்கள், தொழில் பார்ட்னர்கள் மற்றும் பலருக்கு ஒரு சிறந்த ஆப்ஷனாக உள்ளது. இந்த ஜாயிண்ட் அக்கவுண்ட் பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம்.

ஜாயிண்ட் அக்கவுண்ட் என்றால் என்ன?: ஜாயின்ட் அக்கவுண்ட் என்பது 2 அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு தனி அக்கவுண்ட்டை பயன்படுத்துவதற்கு வங்கி அனுமதி அளிப்பதாகும்.

விளம்பரம்

யாரெல்லாம் ஜாயின்ட் அக்கவுண்ட்டை திறக்கலாம்?:

*ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் (கணவன்-மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகள், உடன் பிறந்தவர்கள்

*பிசினஸ் பார்ட்னர்கள்

*நண்பர்கள்

எடை இழப்புக்கான சோயாபீனின் அற்புதமான 7 ஆரோக்கிய நன்மைகள்.!


எடை இழப்புக்கான சோயாபீனின் அற்புதமான 7 ஆரோக்கிய நன்மைகள்.!

அக்கவுண்ட் வகைகள்:

  • சேவிங்ஸ் அக்கவுண்ட்/கரண்ட் அக்கவுண்ட்

  • ஃபிக்சட் / ரெக்கரிங் டெபாசிட்டுகள்

  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் வாழும் இந்தியர்களுடன் இணைந்து ஜாயிண்ட் அக்கவுண்ட்டை திறக்கலாம். வழக்கமாக இது NRO அல்லது NRE அக்கவுண்ட் என்று அழைக்கப்படுகிறது.

அக்கவுண்டை இயக்குவதற்கான வழிகள்: 

  • இரண்டு நபர்களில் யார் வேண்டுமானாலும் அக்கவுண்ட்-ஐ பயன்படுத்தலாம். ஒருவர் இறந்துவிடும் பட்சத்தில் மற்றொருவர் தொடர்ந்து அக்கவுண்டை பயன்படுத்தலாம்.

  • ஏதேனும் டிரான்ஸாக்ஷன்களை செய்ய அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களின் கையெழுத்தும் அவசியம்.

  • முதல் அக்கவுண்ட் ஹோல்டர் மட்டுமே வாழ்நாள் முழுவதும் அக்கவுண்ட்டை இயக்க முடியும். அவருடைய இறப்புக்கு பிறகு இரண்டாவது நபர் அக்கவுண்டை இயக்கலாம் என்ற ஆப்ஷனையும் பயன்படுத்தலாம் அல்லது

  • இரண்டாவது அக்கவுண்ட் ஹோல்டரால் மட்டுமே அக்கவுண்டை இயக்க முடியும். அவருடைய இறப்பிற்கு பிறகு முதல் நபர் அக்கவுண்ட்டை இயக்கலாம் என்ற ஆப்ஷனையும் பயன்படுத்தலாம்.

KYC ஆவணங்கள்: அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களும் செல்லுபடியாகும் அடையாள மற்றும் முகவரி சான்றிதழ்களை வழங்க வேண்டும். ஆதார் அட்டை, PAN கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அட்டை போன்றவை அடையாள அட்டைகளாக பயன்படுத்தப்படும். அதே நேரத்தில் மின்சார ரசீது, கேஸ் பில் அல்லது வாடகை ஒப்பந்த பத்திரங்கள் முகவரி சான்றிதழாக எடுத்துக் கொள்ளப்படும்.

தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கும் 8 யோகாசனங்கள்.!


தொப்பை கொழுப்பை எளிதாக குறைக்கும் 8 யோகாசனங்கள்.!

நாமினேஷன்: கூடுதல் பாதுகாப்புக்கு ஜாயிண்ட் அக்கவுண்டுக்கு நாமினி ஒருவரை தேர்வு செய்து கொள்ளலாம்.

கூடுதல் தகவல்கள்:

  • இந்த அக்கவுண்ட் மூலமாக ஓவர் டிராஃப்ட், கடன்கள் போன்றவற்றை அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களும் பெறலாம்.

  • இது மூலமாக பெறப்படும் வருமானம் முதல் அக்கவுண்ட் ஹோல்டருக்கு வரியீட்டுக்கு கணக்கெடுத்துக் கொள்ளப்படும்.

  • அக்கவுண்ட்டை மூடுவதற்கு அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களின் ஒப்புதலும் தேவை.

  • அக்கவுண்ட் ஹோல்டர்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பிரச்சனை சரியாகும் வரை அக்கவுண்ட் முடக்கி வைக்கப்படும்.

ஜாயிண்ட் அக்கவுண்டை எப்படி திறப்பது எப்படி?:

*நீங்கள் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறக்க விரும்பும் வங்கிக்கு சென்று ஜாயிண்ட் அக்கவுண்ட் விண்ணப்ப படிவத்தை பெற்று அதனை நிரப்ப வேண்டும்.

*பிறகு அனைத்து அக்கவுண்ட் ஹோல்டர்களுக்குமான அடையாள மற்றும் முகவரி சான்றிதழை வழங்க வேண்டும்.

*மேலும் அக்கவுண்ட் ஹோல்டர்களின் சமீபத்திய புகைப்படம் அவசியமாக கொடுக்கப்பட வேண்டும்.

விளம்பரம்
மாதவிடாய் நாட்களின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா.?


மாதவிடாய் நாட்களின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா.?

*உங்களுடைய அக்கவுண்டை எப்படி இயக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதனை தெரிவித்து குறைந்தபட்ச டெபாசிட் தொகையை வழங்க வேண்டும்.

*அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு உங்களுடைய அக்கவுண்ட் ஆக்டிவேட் செய்யப்படும்.

.



Source link