அmடிவ2008-ம் ஆண்டில் அனில் அம்பானி தனது மூத்த சகோதரர் முகேஷ் அம்பானியை விட அதிகமான சொத்துகளுடன், உலக அளவில் பணக்காரர் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்தார். அந்த சமயத்தில், அனில் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றி வந்ததோடு, 42 பில்லியன் அமெரிக்க டாலர் (இன்றைய மதிப்பீட்டின்படி சுமார் ரூ.350 கோடி) சொத்து மதிப்பைக் கொண்டிருந்தார்.

அனில் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸை இரண்டாக பிரித்த பிறகு, 2006ம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமம் நிறுவப்பட்டது.

விளம்பரம்

Also Read: 
Gold Rate | தங்கம் விலை ரூ.7000-க்கும் குறைவாக சரசரவென சரிவு.. இன்றைய விலை என்ன தெரியுமா?

அனில் அம்பானி ரிலையன்ஸ் கேபிடல், ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் போன்ற நிறுவனங்களை நிர்வகித்தார். ரிலையன்ஸ் பவர் மூலம் பங்குச்சந்தையில் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவை வெளியிட்டு மிகப்பெரிய சாதனை படைத்தார்.

அவரது செல்வாக்கு பொழுதுபோக்குத் துறையிலும் விரிவடைந்தது. அங்கு அவர் Adlabs ஃபிலிம்ஸில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கி, ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் DreamWorks உடன் இணைத்து, 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நிறுவனத்தை தொடங்கினார்.

இருப்பினும், 2020 ஆண்டுவாக்கில், அனில் அம்பானி கடுமையான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டார். பல கடன்கள் மற்றும் சட்ட மோதல்களுக்கு இடையில் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகவும், தான் திவாலாகிவிட்டதாகவும் பிப்ரவரி மாதம் அறிவித்தார். அவரது முக்கிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கேபிடல் லிமிடெட் (RCL), 2020ம் ஆண்டின் இறுதிக்குள் ரூ. 20,379.71 கோடி கடனைப் பெற்றுள்ளதாக அறிவித்தது.

விளம்பரம்

இவ்வளவு சவால்கள் இருந்தபோதிலும், அவரது மகன்களான ஜெய் அன்மோல் மற்றும் ஜெய் அன்ஷுல் அம்பானி ஆகியோர் நிறுவனத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து கடனிலிருந்து மீட்கத் தொடங்கினர். அவர்கள் தலைமையில் ரிலையன்ஸ் பவரின் பங்கு மதிப்பு உயர்ந்தது. மேலும் ஜப்பானின் நிப்பான் நிறுவனம் மூலம் கிடைத்த முதலீடுகள் ரிலையன்ஸ் கேபிட்டலுக்கு புத்துயிரை அளித்துள்ளது.

இதையும் படிக்க: Value Of Money: 20, 30 மற்றும் 50 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1 கோடியின் மதிப்பு என்ன? பதில் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

விளம்பரம்

இன்று, அனில் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 29.9 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ( இந்திய மதிப்பில் ரூ.249 கோடி). ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை மதிப்பு மீண்டும், தற்போது ரூ.10,759 கோடியாக உள்ளது. தொழிலில் பல இறக்கங்களை சந்தித்தாலும், அனில் அம்பானி தனது குடும்பத்துடன் ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வருகிறார்.

பாலிவுட் நடிகை டினா முனிமை 1991-ல் திருமணம் செய்து கொண்டார் அனில். இவர்கள் மும்பையின் க பாலி ஹில் பகுதியில் அமைந்துள்ள “அபோட்” என்ற 17 மாடி மாளிகையில் வசித்து வருகின்றனர். இந்த 16,000 சதுர அடி வீட்டில் ஹெலிபேட், நீச்சல் குளம், மாடித் தோட்டங்கள், பல உடற்பயிற்சி கூடங்கள், கேரேஜ்கள் மற்றும் ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கென்று தனித்தனி தளம் உள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
உங்க கிட்ட இன்னும் 2,000 ரூபாய் நோட்டுகள் இருக்கா? எங்கே, எப்படி மாற்றலாம்? ரிசர்வ் வங்கி விளக்கம்!

அதுமட்டுமின்றி ரூ.311 கோடி மதிப்புள்ள பிரைவேட் ஜெட் விமானமும் அனில் அம்பானியிடம் உள்ளது. அனிலின் சொகுசு கார் சேகரிப்பில் ரோல்ஸ் ராய்ஸ் பேண்ட்டம் (ரூ.3.5 கோடி), லெக்ஸஸ் எஸ்யூவி, ஆடி க்யூ7 (ரூ.88-97 லட்சம்), மெர்சிடிஸ் ஜிஎல்கே350 (ரூ.77 லட்சம்) ஆகியவை அடங்கும். இன்று அனில் மற்றும் டினா அம்பானி இருவரும் தங்கள் இரண்டு மகன்கள் மற்றும் மருமகள் க்ரிஷா ஷாவுடன் “அபோட்” இல்லத்தில் வாழ்கின்றனர்.

விளம்பரம்

.



Source link