நீங்கள் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் போலி எஸ்எம்எஸ் மூலம் சோர்வடைந்து, ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளிலிருந்து விடுபடுவதற்கான வழியைத் தேடுகிறீர்களா? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். உங்களுக்கு வரும் தேவையில்லாத அழைப்புகள் அனைத்தையும் நீங்கள் ஒன்றின் பின் ஒன்றாக பிளாக் செய்ய வேண்டியதில்லை. இந்த சூப்பரான ட்ரிக் தெரிந்தால், வெறும் சில நிமிடங்களில் ஒட்டுமொத்தமாக உங்களுக்கு வரக்கூடிய அனைத்து ஸ்பேம் கால்ஸ் மற்றும் மெஸ்ஜ்களை நீங்கள் பிளாக் செய்துவிடலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த ஸ்பேம் அழைப்புகளானது, சில நேரங்களில் மோசடி அழைப்புகளாகவும் இருக்கும் என்பதால் இவற்றை பிளாக் செய்வது சிறந்தது மற்றும் பாதுகாப்பானது. இந்த அழைப்புகள் மற்றும் செய்திகள் AI மற்றும் மெஷின் லேர்னிங் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன என்று ஒருபோதும் கருத வேண்டாம். ஏனெனில், சைபர் கிரிமினல்கள் ஏமாற்றுவதற்கு ரோபோகால் போன்ற தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர். அதனால்தான் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அற்புதமான அம்சத்தை வழங்குகிறது.
MyJio ஆப் மூலம் ஒரே கிளிக்கில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை ஓரளவு தடுக்கலாம். இதற்கு சில செயல்முறைகளை பின்பற்ற வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஸ்பேம் அழைப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். ஸ்பேம் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நாட்டில் மக்கள் தினமும் ஏமாற்றப்படுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக புதிய வசதிகளை வழங்கி வருகின்றன. ஜியோ நெட்வொர்க்கில் ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளை நிறுத்த, நீங்கள் டூ நாட் டிஸ்டர்ப் (DND) சேவையை செயல்படுத்த வேண்டும். இந்த சிறிய அமைப்பில், ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகள் மற்றும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம் மற்றும் தடுக்கலாம்.
இதுமட்டுமின்றி வாடிக்கையாளர்கள் DND சேவையையும் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். அதாவது நீங்கள் தடுக்க விரும்பும் அழைப்புகள் மற்றும் செய்திகளின் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பில்டர் செய்வதன் மூலம் DND சேவையை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். விருப்பங்களில் வங்கி, ரியல் எஸ்டேட், கல்வி, சுகாதாரம், சுற்றுலா போன்றவை அடங்கும். மேலும் ஃபுல் பிளாக் ஆப்ஷனை நீங்கள் எனேபிள் செய்தாலும், உங்கள் சர்வீஸ் ப்ரொவைடர் மற்றும் அரசு நிறுவனங்களிடமிருந்து பரிவர்த்தனை அழைப்புகள் அல்லது SMSகளைப் பெறுவீர்கள்.
ஜியோவில் DND-ஐ எப்படி இயக்குவது?
-
ஸ்பேம் அழைப்புகளை நிறுத்த, முதலில் My Jio ஆப்-ஐ ஓபன் செய்யவும்.
-
‘மோர்’ என்பதை கிளிக் செய்யவும்.
-
பிறகு “டூ நாட் டிஸ்டர்ப்” (do not disturb) என்பதைக் கிளிக் செய்யவும்.
இதையும் படிக்க:
மீடியாடெக் ஹீலியோ ஜி50 ப்ராசஸர் & 5,000mAh பேட்டரியுடன் அறிமுகமாகியுள்ள Tecno Pop 9 மொபைல்
நீங்கள் முழுவதுமாக தடுக்கப்பட்டது, விளம்பரத் தொடர்பு தடுக்கப்பட்டது மற்றும் கஸ்டமைஸ் விருப்பம் போன்ற விருப்பங்களை இங்கே காண்பீர்கள்.
இதில் முழுவதுமாக தடுக்கப்பட்ட விருப்பத்தை நீங்கள் அக்சஸ் செய்வது சிறந்தது. ஏனெனில் போலி அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
.