நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்காக ரூ.899 மற்றும் ரூ.3,599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களுடன் சில பிரத்யேக பலன்களை தொகுத்து புதிய “Diwali Dhamaka” சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோவின் இந்த பிரத்யேக ஆஃபரின் கீழ் அக்டோபர் 25, 2024 முதல் நவம்பர் 5, 2024 வரை மேற்கண்ட பிளானை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் EaseMyTrip, Ajio மற்றும் Swiggy போன்றவற்றில் இருந்து ரூ.3,350 மதிப்புள்ள வவுச்சர்களை பெற முடியும். இந்த ஆஃபர்கள் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விவரங்கள் இங்கே…

விளம்பரம்

ரூ.899 மற்றும் ரூ.3,599 பிளான்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி ஆஃபர்:

ரூ.899 ப்ரீபெய்ட் பிளானை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் தினசரி 2GB டேட்டா, கூடுதல் 20GB போனஸ் டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களை வழங்குகிறது. மேலும் இது 90 நாட்களுக்கான வேலிடிட்டி பீரியடை கொண்டுள்ளது.

ரூ.3,599 ப்ரீபெய்ட் பிளானை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ நிறுவனம் தினசரி 2.5G டேட்டா, அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி பீரியட்டை வழங்குகிறது. மேற்கண்ட பெனிஃபிட்ஸ்களை தவிர, ரிலையன்ஸ் ஜியோ சில வவுச்சர்களையும் வழங்குகிறது. இதற்காக நிறுவனம் EaseMyTrip மற்றும் Swiggy போன்ற பிரபல பிராண்டுகளுடன் கூட்டு சேர்ந்துள்ளது. ஆஃபர்கள் பின்வருமாறு:

EaseMyTrip:

ஹோட்டல்கள் மற்றும் விமான பயண முன்பதிவுகளுக்கு ரூ.3,000 தள்ளுபடி வவுச்சர் பொருந்தும்.

Ajio:

ரூ.999 மற்றும் அதற்கு மேல் வாங்கும்போது ரூ.200 தள்ளுபடி.

Swiggy:

உணவு ஆர்டருக்கு ரூ.150 டிஸ்கவுன்ட் வவுச்சர் (Swiggy voucher)

இதையும் படிக்க:
TRAI New Rule: நவம்பர் 1 முதல் மெசேஜ் வராது? ஜியோ, ஏர்டெல், வி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்..

ஜியோவின் 2024 தீபாவளி தமாகா கூப்பன்களை ரிடீம் செய்வது எப்படி?

இந்த வவுச்சர்கள் ரீசார்ஜ் செய்த பிறகு யூஸர்கள் அக்கவுன்ட்டிற்கு வரவு வைக்கப்படும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூறி உள்ளது. மேற்கண்ட 2 பிளான்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்தபின் வாடிக்கையாளர்கள் MyJio ஆப் மூலம் வவுச்சர்களை அணுகலாம்.

விளம்பரம்
  • MyJio ஆப்-ஐ ஓபன் செய்து “Offers” செக்ஷனை ஓபன் செய்யவும்.

  • My winnings ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

  • விரும்பும் கூப்பன் கோடை தேர்ந்தெடுத்து காப்பி செய்து கொள்ளவும்.

  • பார்ட்னரின் வெப்சைட்டில் செக் அவுட் செய்யும்போது க்யூரேட்டட் பார்ட்னர் லிங்க்கை பின்தொடர்ந்து
    code-ஐ பயன்படுத்தவும்.

.



Source link